உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மே 3இல் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மே 3இல் தேர்வு

நெல்லை, ஏப்.28 தமிழ்நாடு அரசுப் பணியில் உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான தேர்வு முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் ஆகியவற்றில் 200 வினாக்களுக்கு நடத்தப்படும். இதற்கான கணினி வழித் தேர்வு மே 3ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, விழுப்புரம் உட்பட 22 முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

தேர்வு அறையினுள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதர நபர்கள் தேர்வு மய்யத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நடக்கும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பிரதான தேர்வில் பொது அறிவுத் தாள், பொது ஆங்கிலம், விருப்ப பாடம் 1, 2 என நான்கு தாள்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

No comments:

Post a Comment