பழம் பெரும் கொள்கைத் தோழர் டாக்டர் சவுந்தரராஜன் அமெரிக்காவில் மறைவெய்தியது (20.3.2023) அறிந்து மிகவும் துயருற்றோம்.
திராவிட மாணவர் கழகத் தின் துவக்க காலத் தோழர்களில் ஒருவராகவும், பிறகு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் எங்களது மூத்த தோழராகவும், பொருளாதார ஹானர்ஸ் பட்டதாரியாகி, பிறகு ஆய்வாளராக இருந்து - அந்தக் கால கட்டத்திலும் அவரும், நானும் பொருளாதார ஆய்வாளர் (Economic Investigator) என்ற பொறுப் பிலும் பொருளாதாரத் துறையில் ஓராண்டு பணியாற்றிய வர்கள்.
(அந்நாளில் பல கூட்டங்களில் கலைஞருடனும் மற்றும் நாவலர், பேராசிரியர் போன்றவர்களுடனும் பல மேடைகளில் பேசியவரும்கூட).
பிறகு எங்களது ஆசிரியரும், நண்பருமான, பேராசிரியர் டாக்டர் அனந்தராமன் அவர்களது பேருதவி, பெரு நட்பாலும் - டாக்டர் சவுந்தரராசன் அவர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும் டாக்டரேட் முடித்து பொருளாதாரப் பேராசிரியராகவும் திகழ்ந்தவர்.
எங்களது 'அகநக நட்பு' சுமார் 70 ஆண்டு கால நட்பு ஆகும்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் சவுந்தரராஜன் அவர்களிடம் சென்ற முறை அமெரிக்கா சென்றி ருந்தபோது, தொலைபேசியில் நீண்ட நேரம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தோம்.
வெகுவாக நமது பணியை - "திராவிடர் இயக்கத்தைப் பலப்படுத்தி வருகிறீர்கள் பாராட்டு" - என்று உணர்ச்சியுடன் என்னை உற்சாகப்படுத்தினார். எனது வாழ்விணையரிடமும், மற்றவர்களிடமும் நன்கு அறிமுகமானவர்.
சிறிது காலமாகவே உடல் நலம் குன்றிய நிலையில் ஓராண்டு முன் அட்லாண்டா (USA) வில் அவர் மகள் வீட்டில் தங்கியிருந்த போது அவரது நலம் குறித்து விசாரித்துப் பேசினோம்.
எனது அடிநாள் தோழரை இழந்த துயரம் வாட்டுகிறது என்றாலும் இயற்கையை எண்ணி ஆறுதல் கொள்வோம். அவரை இழந்து துயருறும் அவரது குடும்ப உறவுகள் அத்துணை பேருக்கும் ஆறுதலும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் தலைமையில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தொண்டறத்தை வெகுவாகப் பாராட்டத் தவறாதவர் டாக்டர் சவுந்தரராஜன். இனிய பண்பாளர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: டாக்டர் சவுந்தரராஜன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 2.4.2023, ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு அமெரிக்கா - அட்லாண்டாவில் நடைபெறும்.
No comments:
Post a Comment