15.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ‘இந்தியா' ‘ஹிந்து ராஷ்டிராவாக' மாற்ற தேவையில்லை. ஏற்கனவே அப்படித்தான் உள்ளது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* விஞ்ஞான, தொழில் நுட்பத்தை சில அரசியல் கட்சி கள் தவறாக பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* லண்டனில் ராகுல் பேச்சை முழுமையாக கேட்காமல், இந்திய தொலைக்காட்சிகள் உண்மைகளை மறைத்து செய்திகள் வெளியிடுகின்றன என காங்கிரஸ் கட்சியின் அயலக தலைவர் சாம் பிட்ரோடா விமர்சனம்.
தி ஹிந்து:
* ஓபிசி உட்பிரிவு குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம், சமூக பொருளா தார ஜாதி கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையின் தகவல் பெறாமல் செயல்படுகிறது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்.
தி டெலிகிராப்:
*அதானி விவகாரத்தில் போராட்ட வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தெலங்கானா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தும் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
- குடந்தை கருணா