பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

 எங்கே போயின ‘ஹிந்து' நாளிதழ்களும், ஊடகங்களும் 

பெங்களூரு, மார்ச் 15- பெங்க ளூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலை யத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென் றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்கினார்.

மேலும், “வேறு மாநி லத்தை சேர்ந்த இவர், எப்படி இங்கு வாடகை பைக் ஓட்டலாம்?” என எச்சரித்தார். இந்த நிகழ்வின் காட்சிப்பதிவு  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மனித உரிமை ஆர்வ லர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் வட மாநிலத்தொழிலாளியை ஆட்டோ ஓட்டுநர்கள் அடித்து துன்புறுத்துகின் றனர். எந்த ஊடகமும் இதனை ஒரு செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக் கது

தமிழ்நாட்டில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வரும் ஹிந்திக்காரன் ஒருவனை வைத்து பணம் செலவழித்து தமிழ்நாட் டில் ஹிந்திக்கார தொழி லாளிகள் தாக்குவது போன்று நடக்காத ஒரு நிகழ்வை வைத்து படம் எடுத்தனர். அதனை சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டு பீகார் மற் றும் தமிழ்நாட்டிற்கி டையே பெரும் பகையை உருவாக்க முயன்றனர். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித மாக செயல்பட்டு காவல் துறையினரும் மற்றும் இரண்டு மாநில உயரதி காரிகளும் இணைந்து ஆய்வு நடத்த உத்தர விட்டார். இதன் காரண மாக தாக்குதல் குறித்த தகவல்கள் அனைத்தும் திட்டமிட்டு பாஜகவின ரால் பரப்பப்படுவதை சான்றுகளோடு உண்மை கள் அனைத்தும் வெளி யாயின. முக்கியமாக பா.ஜ.க.வின் வட இந்திய செய்தி தொடர்பாளர்கள் அங்குள்ள சில ஊடகவி யலாளர்கள் இதன் பின் னணியில் செயல்படுவ தும் தெரியவந்தது. 

இத¬ னத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மிகவும் முக்கிய குற்றவா ளியான   உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் பிரசாத் உம்ராமீது நடவடிக்கை எடுக்க டில்லி விரைந்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால் அவரோ டில்லி உயர்நீதிமன்றத்தை நாடி பிணைகோரியுள்ளார். தற்போது மதுரை நீதி மன்றம் அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து விட்டது.  அதாவது நடக்காத ஒரு நிகழ்வை வைத்து இரு மாநிலங்க ளுக்கு இடையே பகை மற்றும் வன்முறையை உரு வாக்கத்துடித்த பாஜக வின் முயற்சி நிறைவேற வில்லை.

No comments:

Post a Comment