Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
'சுதந்திர' நாட்டில் இன்னும் ஜாதி, தீண்டாமையா?
March 13, 2023 • Viduthalai

தெலங்கானா தனியார் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் விடுதிக் கண்காணிப்பாளர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனை ஜாதிரீதியாக கொடுமைப்படுத்தியதால் அந்த மாணவர்  தற்கொலை செய்து கொண்டார், இந்தக் கொலையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், விடுதிக் காப்பாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவர் நகுலா சாத்விக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். 

 கல்லூரி நிர்வாகம் அளித்த சித்ரவதையால்தான் மாணவர் இந்த முடிவை எடுத்து உள்ளார் என அவரது பெற்றோர் குற்றச்சாட்டு கூறினர். இந்த வழக்கில் கல்லூரி  முதல்வர் ஆச்சார்யா, துணை முதல்வர் சிவராமகிருஷ்ணா, வார்டன் நரேஷ், துணை முதல்வர் ஷோபன் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதன்மையர் ஜெகன் தப்பியோடி விட்டார். படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டிய ஆசிரியர்களே துன்புறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்து உள்ளனர். வாட்ச்மேன் வேலைக்குக்கூட போக முடியாது என அந்த மாணவரை கல்லூரி முதன்மையர் திட்டியுள்ளார் என  விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தற்கொலை பற்றி நடந்த விசாரணை முடிவில் வெளியான அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

நகுலா சாத்விக் விடுதி கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை எனக் கடிதம் வழியே புகார் தெரிவித்து உள்ளார்; அதற்குப் பதிலடியாக, முன்பு கழிப்பறைகளைக் கழுவிக் கொண்டு இருந்தவர்கள் இன்று படிக்கவந்துவிட்டார்கள் என்று  தொடர்ந்து, நகுலா சாத்விக் பற்றி பொதுவெளியில் அவதூறு ஏற்படுத்துவது தொடங்கியது. குடிநீர், உணவு, கழிப்பறை தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை பற்றி கேள்வி எழுப்பிய மாணவரை விடுதி வார்டன் தாக்கிப் பேசி வந்து உள்ளார். அந்த வகையில், அந்த மாணவரை சில சமயங்களில் தகாத வார்த்தை களால் திட்டுவதுடன், அடிக்கவும் செய்து உள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சேர்ந்து கொண்டு அந்த மாணவரை மனம் மற்றும் உடல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபோன்று,  கல்லூரி முதல்வர் ஜெகன், மாணவரைக் கூப்பிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, வசைபாடி உள்ளார். அவரது அறை முன்பு மணிக்கணக்கில் நிற்க வைத்து உள்ளார். துணை முதல்வர், மாணவரிடம் கடுமையாகப் பேசி, ஏளனம் செய்ததுடன், பிற மாணவர்கள் முன்னிலையிலும் கேலி செய்தும் உள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி தனது அண்ணன் மிதுனிடம் மாணவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினரிடம் மிதுன் கேட்டு உள்ளார். அதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர், நாங்கள் இப்படித்தான் பாடம் புகட்டுவோம், கல்லூரியில் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கல்லூரியை விட்டு வெளியேறலாம் எனத் திமிராகப் பதில் கூறியுள்ளனர். தெலங்கானாவில் ஒரு வாரத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள்   4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  தெலங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் காகத்தியா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி பிரீத்தி. இளநிலை மருத்துவரான அவர், தற்கொலை செய்து கொண்டார். பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதேபோன்று, நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தாசரி ஹர்ஷா என்பவர்,  தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானாவில், மற்றொரு சம்பவத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் இறந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

மும்பை, சென்னை மற்றும் போபால் போன்ற நகரங்களில் உள்ள  உயர்கல்வி நிறுவனங்களில் சமீப நாட்களாக சில மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் ஜாதிய வன்கொடுமைகள் காரணமாக தங்களுயிரை மாய்த்து வருகின்றனர். இப்படி ஜாதிய ரீதியாக கல்வி நிலையங்களில் நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  மாணவர் அமைப்பினர் கலந்துரையாடல் ஒன்று நடத்திய போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் படங் களை உடைத்து வீசினர், மேலும் குறிப்பாக தமிழ் மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர்.  இந்த நிலையில் மீண்டும் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

சுதந்திரத்தின் பவள விழா கோலாகலமாகக் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. ஆனால் இங்கே பிறப்பின் அடிப்படையில் பேதம் என்ற கொடிய நோய் ஒழிந்த பாடில்லை.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டார் தந்தை பெரியார். அதற்காக ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தைக் கூட நடத்தினார். ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சிறை ஏகினர். இந்த விலை கொடுத்தும்கூட இந்தியாவில் ஜாதியும் தீண்டாமையும் தலை விரித்து ஆடுவது வெட்கக் கேடே!  

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn