ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் ஏன்?

மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி 

புதுடில்லி, மார்ச் 31 - ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்ப து ஏன் ?” என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அனைத்து ஒன்றிய பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்பது ஏன்? என்று கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் “இந்திய ஒன்றிய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பாடத் திட்ட மாற்றம், விருப்பத் துறைகள்  மாற்றம் போன்ற காரணங்களுக்காக தனிப்பட்ட முறையில் இடை நின்று வெளியேறுகிறார்கள். அதாவது 2018 முதல் 2023 ஆண்டுகளில் மொத்தம் 9,578 பிற்படுத்தப்பட்ட  மாணவர்களும், 5,101 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களும், 4,577 பழங்குடியின மாணவர்களும் இதுபோன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து இடைநின்று வெளியேறியுள்ளனர். இதைத் தடுக்கும் விதமாக கல்விக் கட்டணக் குறைப்பு, கல்வி உதவித்தொகை , தேசிய அளவிலான கல்வி உதவித்தொகைக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது”என்று கூறினார். 


No comments:

Post a Comment