Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பதிலடிப் பக்கம்
March 13, 2023 • Viduthalai

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

எது துவேஷம் - எது பிரிவினை வாதம்?

‘துக்ளக் ஏன் தி.மு.க.வைத் தொடர்ந்து எதிர்க்கிறது!' என்று கேட்பார்கள். தி.மு.க.விடம் நேர்முக, எதிர்முக பிரிவினை உணர்வுகள் இருக்கின்றன. இதுதான் நமது தி.மு.க. எதிர்ப்பு நிலைக்குக் காரணம்.

நீட் எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, ஹிந்துத் துவேஷம், மைனாரிட்டி தாஜா, தீவிரவாதப் பரிவு இவற்றிற்குப் பின்னால் எல்லாம் மறைந்திருப்பது நாட்டுக்கு எதிரான சிந்தனை, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான கருத்து. இந்த அம்சங்களை எல்லாம் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால், இது ஒரு தேசத்துக்கு விரோதமான சக்தி. (கைதட்டல்).

‘துக்ளக்' ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் உதிர்த்தவை! (துக்ளக், 8.3.2023, பக். 20)

திருவாளர் குருமூர்த்திவாள் கூறி இருப்பது தி.மு.க.வுக்குப் பாராட்டா, கண்டனமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘நீட்' எதிர்ப்பு - திமுக செய்வது துவேஷமா? ஒடுக்கப்பட்ட மக்களில், முதல் தலைமுறையாக மருத்துவக் கல்லூரியில் நுழையத் துவங்கிடும் - இதுவரை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், சாஸ்திரங்களின் பெயரால், கல்வி தடை செய்யப்பட்ட மக்களைக் கைதூக்கினால் மனிதாபிமான - சமூகநீதிக்கான நல்முயற்சியா? இல்லையா?

இந்தச் சமூகநீதிக்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கூட்டம்தானே துவேஷ நஞ்சை அள்ளிக் கொட்டும் ஆதிக்கவாதிகள் - பிரிவினை சக்திகள்.

நீட்டுக்கு முன் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? நீட்டுக்குப் பிறகு இந்த மாணவர்கள் தட்டிப் பறித்த இடங்கள் எத்தனை? புள்ளி விவரங்களைக் கொடுக்க துக்ளக் கும்பல் குருமூர்த்தி அய்யர்வாள்கள் தயார்தானா?

‘நீட்' தேர்வால் ஏற்பட்ட இழப்புகள்

தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லை.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை - எளிய மக்கள் மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர். பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற கண்ணி வெடியைப் பதுக்கி வைத்திருந்தவர்கள் ஆயிற்றே.

தந்தை பெரியார் குரல் கொடுத்து நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராமராய நிங்கர்) பிரதமராக இருந்தபோதுதான் அந்தச் சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார்.

அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டர்கள் ஆனார்கள். சுப்பன் எம்.பி.பி.எஸ்., குப்பன் எம்.டி என்ற போர்டுகளைக் கண் குளிர பார்க்க முடிந்தது.

இதனை ஒழிக்க வேண்டும் என்பதுதான் உயர் ஜாதி பார்ப்பனப் பூணூல் கூட்டத்தின் பெருங் கனவாக இருந்து வந்தது.

பொருத்தமாக பிஜேபி ஆட்சி மத்தியில் வந்தாலும் வந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டாலும் 'நீட்' தேர்வு உச்சநீதி மன்றத்தால் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது.

2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியோ, மறுசீராய்வு மனு போட்டு கெட்டிக் காரத்தனமாக 'நீட்'டுக்கு உயிரை உண்டாக்கி விட்டது. அதன் பலனை ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் பெருங் கொடுமை இப்பொழுது!

எந்த அளவு பாதிப்பு?

இந்தப் புள்ளி விவரத்தைப் படியுங்கள், படியுங்கள்!

2016ஆம் ஆண்டில் 'நீட்' தேர்வு இல்லாத நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கும், +2 அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைத்த இடங்களையும், 2017 முதல் 'நீட்' வந்தபின் கிடைக்கப் பெற்ற இடங்களையும் கண்ணுள்ளவர்கள் கொஞ்சம் கருத்தால் சிந்தித்துப் பார்க்கட்டும்!

2016ஆம் ஆண்டின் நிலை என்ன?

திறந்த போட்டி - 884 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் - 599

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 159

முசுலிம் 32

தாழ்த்தப்பட்டோர் -23

மலைவாழ் மக்கள் -01

உயர்ஜாதி - 68

நீட் இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் - 30

'நீட்' வந்த பிறகு - 5

2016இல் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள்

பெற்ற இடங்கள் - 62

நீட் வந்த பிறகு - 220 (20 மடங்கு அதிகம்)

தமிழ் வழியில் படித்தவர்கள் நீட்டுக்கு முன்

2015-2016 இல் 510 இடங்கள்

2016-2017இல் 537 இடங்கள்

நீட் வந்த பிறகு

2017 -2018 இல் - 52 இடங்கள்

2018-2019இல் 106 இடங்கள்

பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரிகிறதா?

மருத்துவக் கல்லூரி கனவு கண்டு 'நீட்' என்னும் கொடுவாளால் தற்கொலைக்கு ஆளான அனிதா என்ற பெண் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எத்தனைத் தெரியுமா?

1200க்கு 1176 (கட் ஆஃப் மார்க் - 196.75)

(மருத்துவக் கல்லூரியில் சேரும் பாடங்களில்)

நீட் தேர்வில் பெற்றது வெறும் - 86.

அஸ்வத் பெற்ற மதிப்பெண் - 1171

கட்ஆப் 199-(25%)

'நீட்'டில் பெற்றது - 270 (37%)

நிவாதனி - 1181

கட்ஆப் -199 (5%)

'நீட்'டில் - 337 - கட்ஆப் -(46%)

ஆர். ஜனனி - 1182

கட்ஆப் 1-198.5

'நீட்'டில் 279 - கட்ஆப் - (38%)

நூமிளா - 1175 - கட்ஆப் - 197.5 (88.5)

'நீட்'டில் -203 (28%)

மதுவதனா 1168 - கட்ஆப் 1975

'நீட்'டில் - -278 (38%)

கிளாஷியா பிரகாஷ் - 1173

கட்ஆப் - 199.5 (99.75%)

'நீட்'டில் - 297 (41%)

மித்திலா-1166

கட்ஆப் - 197 (98.5%)

'நீட்'டில் - 185 (25%)

ஆயிஸ் வாரியா - 147

கட்ஆப் 196.5 (99.75%)

'நீட்'டில் -207(28%)

+2 தேர்வில் இவ்வளவு மதிப்பெண்களை இவர்கள் குவித்திருந்தாலும், நீட்டில் எவ்வளவுக் குறைவான மதிப்பெண்கள் - இதன் சூழ்ச்சி புரிகிறதா?

மக்கள் மத்தியில் இவற்றை விளக்க வேண்டாமா?

இந்த நீட்டை ஒழிக்க நாம் குரல் கொடுத்தால் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்தால் அது பிரிவினையா? துவேஷமா?

சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தால் நாட்டுக்கு எதிரான சிந்தனையா? பார்ப்பனத் ‘துக்ளக்' ஏடே, பதில் சொல்! பதில் சொல்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn