கேரளாவில் நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க நேரில் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

கேரளாவில் நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க நேரில் கடிதம்

சென்னை, மார்ச் 24 வைக்கத்தில் தந்தை பெரியார் சிறையேகி அப் போராட்டத்தின்மூலம் மனித உரி மையை வென்றெடுத்தார். வைக்கம் அறப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் குமாறு  கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன்வாயிலாக  கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்மூலம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, தமது இசைவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த விவரம் வருமாறு, 

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,கேரள மாநில முதல மைச்சர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம்மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற  மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள மகா தேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த் தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை. 

இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம்     30-ஆம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட் டத்தில் திருவாளர்கள் டி.கே.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர். 

மறுமலர்ச்சி நாயகர் தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.  

இதன்காரணமாக, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வீரர் என அறியப் பட்டதும், வைக்கத்தில் அவரது நினை வாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப் பிடத்தக்கது.

அமைதியான முறையில் 603 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23 ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுற் றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா வினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (1-_4_2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின்  பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால்,  கேரள, தமிழ்நாடு மாநில முதலமைச்சர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தைப்பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக் கம் செலுத்தி,  நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டுமென கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் எழுதி யுள்ள கடிதத்தினை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன்   22.03.2023 அன்று நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்திட கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள தனது இசைவினைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment