Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற இதழிலிருந்து...புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்தி! தமிழ்நாடு அரசு தக்க பதிலடி!
March 08, 2023 • Viduthalai

சிறப்பாக செயல்படுவதாக - 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பாராட்டு!

 புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்திக்கு தமிழ்நாடு அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' (6,3,2023) ஆங்கில நாளேட்டில் வெளியான தலையங்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வில் வெளியிடப்பட்ட தலையங்கம் வருமாறு :-

ஆபத்தான சமூக வலைதள வதந்திகளுக்கு எவ்வளவு விரைவாகப் பதிலடி கொடுத்திட முடியுமென்பதை தமிழ்நாடு அரசும், பீகார் அரசும் காண்பித்துள்ளன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆபத்தான இடையூறு விளை விக்கும் பொய்ச் செய்திகளை எவ்வாறு கையாள் வது? பீகாரிலிருந்து முதன்முதலாக வட இந்தியா விலிருந்து தமிழ்நாட் டிற்கு வந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப் படுகின்றனர் - எனும் வதந்திக்கு எதிர் வினையாற்று வதில் அரசு (இயந்திரம்) ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணடிக்கவில்லை. வதந்திகளைத் தடுத்து அடக் குவதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், அமைச் சர்கள், காவல்துறை, ஆளுநர் ஆகியோர் தொழில்துறையினருடன் உடனடியாகக் கலந்து பேசி திட்ட வட்டமான பதிலடி கொடுத்தனர். தமிழ்நாட்டில் ஹிந்தி பேசும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் பொருட்டு சமூக ஊடகங்களிலும் புலம்பெயர் தொழிலாளர் களுடன் நேரடி சந்திப்புகளும் (கூட்டங்கள்) நடத்தப்பட்டன.

இந்த விஷயத்தில் கவலை தெரிவித்திருந்த பீகார் முதலமைச்சரின் டுவிட்டுக்குப் பதி லளிக்கும் வகையில் இரண்டு வீடியோ செய்தி களும் (ஒன்று உள்ளூர்க்காரர்கள் சண்டை யிட்டுக் கொள்வதும், மற்றொன்று புலம்பெயர் தொழிலாளர் குழுக்கள் இரண்டிற்கிடையிலான சண்டையும்) பழைய காட்சிகள் - என தமிழ்நாடு காவல்துறையால் விளக்கமளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து பாட்னாவுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. பீகாரிலி ருந்து ஒரு குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதில் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் எதுவும் நேர்ந்திடாமல் தமிழ்பேசும் அலுவலர் ஒருவரும் இடம் பெற்றிருக்க கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள புலம்பெயர் தொழி லாளர்கள் ஹோலி பண்டிகைக்கு பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பது வேலை கொடுக்கும் முதலாளிகளுக்குத் தெரியும். ஆனால் இந்த குறிப்பிட்ட பொய்ச் செய்தியால் அவர்கள் திரும்பி வராமல் போய் விடுவார்களோ எனும் அச்சம் அவர்களுக்கு (முதலாளிகளுக்கு) இருந்தது. புலம் பெயர் தொழி லாளர்கள் என்போர் இந்திய பொருளாதாரத்தின் மய்யமும், இதயமும் போன்றவர்களாவர்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்படி இந்தத் தொழிலாளர்கள் 40 விழுக்காட் டினர் என்பது தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண் டில் மாநில அரசு நடத்திய ஆய்வு ஒன்று தமிழ் நாட்டில் 10.6 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது. இவர்களில் பெரும் பான்மையினர் தேர்ச்சி பெறாத் தொழிலாளர்களாவர்; அவர்களில், உற்பத்தித் துறையில் 27% (விழுக் காட்டினரும்), நெசவாலைகளில் 14% (விழுக் காட்டினரும்), கட்டுமானத் தொழிலில் 11.4% விழுக்காட்டினரும் ஈடுபட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வல்லு நர்களும், அமைப்புச் சாரா தொழிலாளர் குழுக்களும் இந்த எண்ணிக்கைக் குறைத்து மதிப்பிடப்பட்டுள் ளதாகக் கருதினர். 2020ஆம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட கோவிட் (பெருந் தொற்றுக் காரணமாக) கதவடைப்பின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறியபோது, இந்திய மக்கள் தொகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற நிலை வெளிப்படையாகத் தெரிந்தது.

எனினும் தங்களுடைய சொந்த மாநிலங் களான பீகார், வங்காளம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகியவற்றில் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைவிட தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் தங்களுக்குக் கிடைத்திடும் வசதிகள் (அளவிற்குறைவாக இருப்பினும்) மிக நன்றாக இருப்பதாகவே அத்தொழிலாளர்கள் உணருகின்றனர். வசதி படைத்தவர்கள், படித்த வர்கள் கூட ஊடகச் செய்திகளின் உண்மைத் தன்மையை சரி பார்க்காதவர்களாக இருக்கும் நிலையில் தங்களுடைய கைப்பேசி (செல்ஃ போன்)களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கத் தெரியாத, எளிதில் பாதிக்கப்படக் கூடிய, அப்பாவி தொழிலாளர் களின் மனங்களை மாற்றுவதற்கு பொய்ச் செய்திகள் பரப்புவோர் முயற்சிக்கின்ற பொழுது மாநில அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், வதந்தித் தீயைப் பரப்பிப் பழக்கப்பட்ட சமூக ஊடகம் தனது (நச்சு) வேலையைச் செய்தது - அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினராலும், பொறுப்பற்ற சில ஊட கங்களாலும் இந்த வதந்தி (தீப்பிழம்பு) விசிறி விடப்பட்டு, பெரிதாக் கப்பட்டது. தமிழ்நாட்டிலும், பீகாரிலும் உள்ள காவல் துறையும் அரசுகளும் இணைந்து செயலாற்றி இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்தது மிகச் சிறந்தவொரு நற் செய்தியாகும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய செயலுமாகும்.

- இவ்வாறு 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: 'முரசொலி' 7.3.2023


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn