பெரியாரின் ''பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

பெரியாரின் ''பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்

நீதிபதி அறிவுறுத்தல்

கோவை, மார்ச் 15- கோவை கற்பகம் பல் கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் மார்ச் 12, தேதி நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த பெண்களை பாராட்டி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மேனாள் மாவட்ட (ம) அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்

அப்போது கூறியதாவது 

மகளிர் நாள் விழாவில் பல்வேறு துறை களில் சிறந்த விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த விழாவில் பரிசு வழங்கியதும், பரிசு பெற்ற பெண்களை அனைவரும் பாராட்டுவதும் மகிழ்ச்சிதான்! அதே சமயம் பல இடங்களில் பெண்களுக்கு பரிசு என்றாலே இன்னும் தட்டு, டம்ளர், பானை, கொடுக்கிற மனநிலை மாற வேண் டும். இனிமேலாவது பெண்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றால், தந்தை பெரி யாரின் புத்தகங்களையே அனைவரும் கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை பெண்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று கூறி பாராட்டு பெற்ற பெண் ஆளு மைகளை வாழ்த்தி உரையாற்றினார்.

விழாவில் சிறந்த நகராட்சி தலைவர் விருது கோவை மதுக்கரை நகராட்சித் தலைவர் நூர்ஜஹான் நாசருக்கும், சிறந்த பேரூராட்சி தலைவர் விருது எட்டிமடை பேரூராட்சித் தலைவர் கோவை கீதா ஆனந்தகுமாருக்கும் மாணவர் நல காப்பாளர் விருது முனைவர் ப. தமிழரசிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிருக்கும் விருது வழங்கி பாராட்டப்பட்டது

கவிதை, நடனம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ற பெண்களுக்கு தந்தை பெரியாரின் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்கு ஆசிரியர் எழுதிய "அய்யாவின் அடிச் சுவட்டில்" புத்தகம் நினைவு பரிசாக தோழர் அ.மு.ராஜா வழங்கினார்.

பகுத்தறிவு புத்தகங்களை வழங்க ஒத் துழைப்பு வழங்கிய தமிழ்நாடு பிரஸ் எம்ப் ளாயிஸ் யூனியன் மாநில தலைவர், செய லாளர், மாவட்ட மாவட்ட அனைத்து நிர் வாகிகளுக்கும் பெரியார் புத்தக நிலையம் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து கொள்ளப் பட்டது.

No comments:

Post a Comment