புதிதாக அறிவிக்கப்பட்ட அரூர் மாவட்ட திராவிடர் கழக தொடக்க விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

புதிதாக அறிவிக்கப்பட்ட அரூர் மாவட்ட திராவிடர் கழக தொடக்க விழா!

அரூர்,மார்ச் 15- ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகமாக இதுவரை செயல்பட்டு வந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஆகிய ஒன்றி யங்களை இணைத்து அரூரை தலைமை இடமாகக் கொண்டு  கழக மாவட்டமாக செயல்பட உத்தர விட்டார்கள்.  

அதன் அடிப்படையில் அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஆகிய ஒன்றியங்களை இணைத்து அரூர் கழக மாவட்ட தொடக்க விழா வெகுசிறப்பாக 12.3.2023 அன்று மாலை 4 மணி அளவில் திரு.வி.க. நகர் சிவராமன் இண்டேன் கேஸ் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

புதியதாக அறிவிக்கப்பட்ட அரூர் மாவட்ட அன்று கழகத் தலைவர் கு.தங்கராஜை தலைமை யேற்று தொடங்கி வைக்குமாறு மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் முன்மொழிந்தார். மண்டல செயலாளர் பழ.பிரபு  வழிமொழிந்தார். மாவட்டச்செயலாளர் சா. பூபதிராஜா அனை வரையும் வரவேற்றுப் பேசினார். 

நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அ. தமிழ்ச் செல்வன், மண்டலச் செயலாளர் பழ.பிரபு, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித் தலைவர் தீ.சிவாஜி,மாநில இளைஞரணி துணைச் செய லாளர் மா. செல்லதுரை, மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ.சமரசம், மாவட்ட இளைஞரணித் தலைவர் த.மு.யாழ்திலீபன், மண்டல மகளிர் பாசறைச் செயலாளர் பெ.கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் 

சா. ராஜேந்திரன் அறிமுக உரையாற்றினர். 

கழக மாநில கலைத்துறை செயலாளர் 

மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார். 

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் மாவட்டத் தலைவர் கு.தங்கராஜ், மாவட்ட செயலாளர் பூபதி ராஜா ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைமைக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

முன்னதாக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் பேசுகையில், தமிழ்நாட்டில் கழக அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ளன. அதில் இன்று புதிய மாவட்டமாக அரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக அதிக அளவில் பெரும்பாலான தோழர் கள் குழுமியுள்ளனர். அதுவும் நிறைய புதிய தோழர்கள் வருகை தந்திருப்பதை தமிழர் தலை வர் அவர்கள் பார்த்திருந்தால் மகிழ்ச்சி அடை வார்கள். சிறப்பாகவும் அதேசமயம் தோழர்களுக்கு எளிமையாகவும் இயக்கப்பணி செய்யவே மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 

அரூரைப்பற்றி ஆசிரியர் அடிக்கடி சுட்டிக் காட்டிப் பேசுவார்கள். இங்கே புதிய பொறுப்பாளர் களுக்கு  உதவிடும் வகையில்  அரூர் சா.ராஜேந் திரன் போன்றவர்களும், இயக்க வழிகாட்டுதலுக்கு தமிழ்ச்செல்வன், மாரி கருணாநிதி, சிவாஜி  போன் றவர்களும் இருக்கிறார்கள். உங்களையெல்லாம் வழிநடத்த மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் இருக்கிறார். மாவட்டம் மேலும் வளர வாழ்த்துகளையும், புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டையும் தெரிவித்து பேசினார்.

இறுதியாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றுகையில்,

தமிழர் தலைவர் அவர்களின் 4 ஒன்றியங் களுக்கு மேல் உள்ள மாவட்டங்களை இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி  அரூரை  தலைமை  இடமாகக் கொண்டு பிரிக்கப் பட்டுள்ளது. அரூர் பகுதி என்பது பெரியார், அம்பேத்கர் கொள்கையாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தினர் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் பல பெரியார் தொண்டர்கள்  கழகத்தை வளர்க்க அரும்பாடுபட்டு இருக்கிறார்கள்.  இடைப்பட்ட காலத்தில் அரூர் பகுதியில் கழக செயல்பாடுகளில் தேக்கம் இருந்தது. ஆனால் இனி அந்த நிலை மாறும். இன்றைக்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இயக்கத்திற்கு  மாவட்டத்திற்கும்  பொறுப்பாளர் களுக்கும் வழிகாட்டுதலாக இருந்து செயல்படு வார்கள் என்று குறிப்பிட்டார்.

கூட்டம் நடத்துவதற்கான இடம், பைபாஸ் சாலையில் இருந்து கழகக் கொடிகள், ஒலிபெருக்கி மற்றும் ஏற்பாடுகளை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.இராஜேந்திரன் செய்து கொடுத்திருந்தார்.

அவருக்கு மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் நன்றி கூறினர்.

புதிய மாவட்ட தொடக்க விழாவில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் மு.பிர பாகரன், பகுத்தறிவு ஆசிரியர் சி.செந்தில்குமார் ,ஆசிரியரணி செயலாளர்  இராஜவேங்கன், பொம் மிடி நகர செயலாளர் அர.ஆனந்தன், தாதனூர் மாணவர் அணி தலைவர் பிரதாப், மாவட்ட மாணவர் அணி தலைவர் அரிகரன்,  ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சி.சிவராஜ், , கடத்தூர் ஒன்றிய தலைவர் புலவர் பெ. சிவலிங்கம், கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் வ.நடராஜ், இன்டேன் கேஸ்  உதவியாளர் துரை ராஜ்,  விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கோ.குபேந்திரன்,  வெங்கடசமுத்திரம் இளைஞர்  அணி பொறுப்பாளர் அய்யனார், திமுக ஒன்றிய செயலாளர் ராஜா தேசிங்கு,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் அம்பேத்கர்,  சிபிஎம் கட்சியினுடைய ஒன்றிய பொறுப்பாளர் சொக்கலிங்கம், தேசிய மக்கள் கட்சி நிறுவனர்  இனமுரசு கோபால்,  த.மு.எ.ச. மாநில பொறுப்பாளர் கவிஞர் ரவீந்திரபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.       

பங்கேற்றோர்

குமரேசன் (கந்த கவுண்டனூர்), சக்கரவர்த்தி, பிளவங்கன், மாரியப்பன், டேவிட், தஞ்சை நகர செயலாளர்  சவுந்தரராஜன், பிரேம்குமார், தயாள சங்கர், மார்க்ஸ், ராகுல், ராமகிருஷ்ணன், தருண், ஒரத்தநாடு சுரேந்தர், கார்மேகம், குப்புசாமி, சங்கர், கணேஷ், செந்தில், வேடியப்பன், பிரகாசம், வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகிகள்  ஜெய்சங்கர், கண்ணப்பன், புஷ்பலிங்கம், பழனிவேல், சோலை, செந்தில்குமார், ஆனந்தன், அன்பரசன், பிரீத்தி, கண்ணம்மாள், வேலு,மற்றும் பலர் கலந்து கொண் டனர். 

இறுதியாக மாணவர் கழக பொறுப்பாளர் அய்யனார் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment