மின்னணு கல்வி
சென்னை அய்.அய்.டி.யின் சார்பில் இளங்கலை தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது, ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே, ஆன்லைன் வாயிலாக பயிலும் நான்கு ஆண்டு இளங்கலை மின்னணு அமைப்பு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பொறுப்பேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி களாக பதவி வகித்து வந்த எஸ். சிறீமதி, டி. பரத சக்ரவர்த்தி, ஆர். விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ. சத்ய நாராயண பிரசாத் ஆகிய 5 பேர் நேற்று நிரந்த நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
மின்சாரம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு 6 மணி நேரம் அறிவிப்பு!
சாம்பியன்
தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையே யான 62ஆவது தடகளப் போட்டியில் 47 பதக்கங்கள் பெற்று சென்னை மாநகர காவல்துறை அணி வாகையர் பட்டம் பெற்றது.
புதிய திட்டம்
சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டம் தயாரிக்கும் பணியை சென்னை ஒருங் கிணைந்த போக்குவரத்து குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் 'லைட் மெட்ரோ' என்ற பெயரில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த ட்ராம் வண்டியை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
மகளிருக்கு...
பன்னாட்டு மகளிர் தினத்தையொட்டி சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் மகளிருக்கான இலவச கண் பரிசோதனை திட்டம் மார்ச் 31ஆம் தேதி வரை நடை பெறுகிறது.
ஒலி பெருக்கி...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.