சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!

 

புதுடில்லி, மார்ச் 25- தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் 22.3.2023 அன்று விதி எண் 377இன் கீழ் கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினார்.

 அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு மற்றும் இந்தியா ஆகிய வற்றின் பொருளாதார வளர்ச் சியை வலுப்படுத்த சேதுசமுத்திர திட்டம் மிகவும் இன்றியமையாதது. இந்த மாபெரும் திட்டம் 1860 ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப் பட்டு, 1955 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ.ராமசாமி முதலியார் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1963இல் நடைபெ ற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் டாக்டர் நாகேந்திர சிங் தலைமை யில் உயர்மட்டக் குழு அமைக்கப் பட்டு, 1964இல், பல்வேறு சீரமைப் புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. 

பின்னர் மறைந்த மேனாள் பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வை நடத்த அனுமதித்தார் தொடர்ந்து 2004இல், அனுமதி வழங்கப்பட்டு, 2005 ஜூலை, 2இல் தொடங்கப் பட்டது. ஆனால், பணிகள் நடந்த போது, முட்டுக்கட்டை ஏற்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவ தில் தொடரும் தாமதம், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம் பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும். திட்டம் செயல்படுத்தப்ப ட்டால், இந்தியாவின் பொருளா தாரத்தை அது மேம்படுத்தும். 

குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும். படித்த மற்றும் திறமை யான இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதை மனதில் கொண்டு, திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும். எனவே, இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. சேதுசமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்துகிறேன். 

- இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.


No comments:

Post a Comment