இளைப்பாறும் அலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

இளைப்பாறும் அலைகள்!

அசல்

தோற்றுப்

போகும்

அதிசயம்    

                 

ஆற்றல்

அடங்கிக்

கிடக்கும்

அழகு


இயற்கையை

ரசிக்கும்

மனம்


இவருக்குள்ளும்

அடங்கி

இருந்ததை


அப்பட்டமாக்கி

இருக்கிறது

இயற்கை.


மாணவராய்,

இளைஞராய் -


தற்போது 90 வயது

இளைஞராய்


தன்னை

ஆசுவாசப்படுத்திக்

கொள்ள முடியாமல்


பொதுத்

தொண்டால்

மனமகிழும்

இந்தத்

தலைவருக்கும்

இயற்கையை

ரசிக்கும்

ஆசை

இதயத்தில்

இருந்திருக்கிறது.


பார்க்கும்

பார்வையில்

அது

தெரிகிறது. ..


ஓய்வில்லாமல்

ஓடிக்கொண்டு

இருக்கும்

சிறிது நேர

ஓய்வில்


இயற்கையின்

அழகை

ரசிப்பதில்

களிப்பு!


இந்த

அழகைப்

பார்த்ததில்

எங்களுக்கெல்லாம்

எத்தனை

சிலிர்ப்பு ..


ஆர்ப்பரிக்கும்

கடல்

அலைகள்

அமைதியாகி


தலைவரைப்

பார்த்து

தலையங்கம்

எழுதுகிறது

நாங்கள்

ஓய்ந்தாலும்

தலைவர்

ஓய்வதில்லை...


எங்கள்

சீற்றம்

குறைந்தாலும்


தலைவரின்

சீற்றம்

குறைவதில்லை

என்று...


எங்கள்

தலைவரா

இவர்!


எங்கள்

தலைவருக்குள்ளும்

இயற்கையின்

எத்தனை

அழகு!


இந்த

இயற்கையின்

காட்சியிலிருந்து

பிரிய - கண்கள்

மறுக்கிறது......


பொன். பன்னீர்செல்வம்,

மாவட்ட செயலாளர்,

காரைக்கால்.

No comments:

Post a Comment