தமிழரின் பெருமைகளை அறிய கீழடி அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

தமிழரின் பெருமைகளை அறிய கீழடி அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை, மார்ச் 17- தமிழரின் பெரு மைகளை அறிய கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்க்க வேண் டும் என, மதுரை யில் இளம் தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வில் பேசிய அமைச்சர் தங்கம்  தென்னரசு குறிப்பிட் டார். 

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 7 நாள் இளம் தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை நேற்று (16.3.2023) தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்றார். தமிழ்நாடு தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயிற்சியை தொடங்கி வைத்து பேசியது: “தமிழ் மொழியின் சிறப்பாக, செழிப்பாக இருந்த இடம் மதுரை மூதூர் என்றும், தென்பாண்டித் தமிழ் நகர் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகராகும், இறையனார் தமிழ் வளர்த்த இடம் மதுரை தமிழ்கெழு கூடல் - கூடல் மாநகர் என்று 2600 ஆண்டு களுக்கு முன்பே இலக்கியத்தில் உள்ளது. இங்கே வந்திருக்கும் 38 மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கூடுவதும் நான்மாடக் கூடலில்தான். எதிர்காலத்தில் மொழியின் சிறப்பு, பாதுகாப்பு பற்றி முன் எடுத்துச் செல்லக் கூடிய இடம் தான் இது.

அறிவு, ஆற்றல் இவை பற்றி அறிந்து, கற்றுக் கொள்ள வேண்டிய இடம் இப்பயிற்சிப் பட்டறையா கும். இலக்கியப்பயிற்சிக்கு இலக்கணம், இலக்கி யம், காப்பியம் ஆகியவற்றை எதிர்காலத்தின் தேவைக் கேற்ப அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி களில் இலக்கியம் படித்தா லும், அடுத்தகட்டத்திற்கு இப்பயிற்சிப் பட்டறை உங்களை நகர்த்திச் செல் லும். பல்வேறு துறை சார்ந்த ஆற்றலாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். சிறந்த பேச் சாளர்களான இவர்களிடம் கற்றுக் கொண்டு உங்களை உயர்த் திக் கொள்ளுங்கள். இம் முகாமில் 35 தலைப்புகளில் பயிற்சி பெற்றாலும், நீங்கள் பேசும் அமர்வாக அது இருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் பயன்படுத் தப்பட்ட சொற்கள் தற்பொ ழுது பாண்டிய நாட்டில் வழக்கத்தில் உள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் என்று நிலங்களாகப் பிரிந்து இருந்தாலும், மொழியால்தான் நாம் இணைந்திருக்கிறோம். சமணர் குகைகள், நெடுஞ்செழியன் குகைகள், கீழடி யில் வெட்டப்பட்ட குழி கள் ஆகி யவை தமிழின் தொன்மைக்குச் சான்றான வையாகும். கீழடி நாகரிகம் பற்றிய அருங்காட் சிய கத்தை அனைவரும் சென்று கண்டிப்பாக பார்க்க வேண் டும். இதன்மூலம் தமிழ ரின் பெருமை அறிய, தெரிந்து கொள்ள முடியும். முதல மைச்சரின் முயற்சியால் அருங் காட்சியகம் மூலம் தொல் பொருட்களை காட் சிப்படுத்தியுள்ளோம்.தெற் காசியவின் மிகப் பெரிய நூலகமாக மதுரையில் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. 

மேலும், இப்பகுதி இளை ஞர்கள் தொழில்நுட்ப ரீதி யிலும் பயன்பெற வேண்டும் என ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப் படுகிறது. இவற்றின் மூலம் மதுரை முன் மாதிரியாக உருவாக்கப்படும்” என்று அமைச்சர் பேசினார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்து பேசினார். தலைமை ஆசிரியர்கள் பூமி நாதன், கோ. தளபதி, துணை மேயர் நாகராஜன், பயிற்சி ஆட் சியர் திவ்யான்சு நிகம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment