ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு : நிதி அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு : நிதி அமைச்சர்

சென்னை, மார்ச் 25 ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் நேற்று (24.3.2023) சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை  மீதான விவாதத் தில்  சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சொல் வார்கள். நிதி இருந்தால்தானே அதை செலவு செய்ய முடியும். கடனை ஏற்றிக்கொண்டே சென் றால் வட்டிச் சுமை அதிகரிக்கும். அன்று வாட் வரியை 1 சதவீதம் உயர்த்திய பிறகுதான், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரால் செயல் படுத்த முடிந்தது. இப்போது, ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிப்பதால், மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன. அன்று குஜராத் முதல்-அமைச்சராக இருந்த நரேந் திர மோடியும், தமிழ்நாடு முதல மைச்சராக இருந்த ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த் தனர். அப்படி இருந்தும் தமிழ் நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடி குறைக்கப்பட் டுள்ளது. ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக் கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

No comments:

Post a Comment