கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு அதிகம்

 சென்னை,மார்ச்16- தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (15.3.2023 தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சென்னையில் நாளை (மார்ச் 17)  மருத்துவ முகாமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார். தமிழ்நாட்டில் `எச்3என்2' என்ற இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையிலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிலோ அனுமதிக்கும் நிலை இதுவரை ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படும்.

கரோனாவுக்குப் பிறகு, இளம்வயதினர் மாரடைப் பால் உயிரிழப்பது பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதயவியல் துறைமருத்துவர்களுடன் ஆலோசித்துள்ளோம்.

இது சம்பந்தமான உலகளாவிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று உலகசுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர்களும் ஆய்வு மேற்கொண்டு, உரியதீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment