உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து

ஜெனிவா, மார்ச் 21 உலகில் மிகவும் மகிழ்ச்சி யான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில், இந்தியாவுக்கு 136 ஆவது இடம் கிடைத் துள்ளது.

உலகம் முழுவதும்  மார்ச் 20 பன்னாட்டு மகிழ்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு உலகளவில் மிகவும் மகிழ்ச்சி யான நாடுகளின் பட்டியலை  Sustainable Development Solutions Network  என்ற அய்நா அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் மகிழ்ச் சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதல் இடத்தை பிடித்த நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது பின்லாந்து. மேலும், இந்த பட்டியலின் 2 ஆம் இடத்தில் டென்மார்க், 3 ஆவது இடத்தில் அய்ஸ்லாந்து, 4 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் 5 ஆவது இடத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன. இதில் இந்தியாவுக்கு 136 ஆவது இடம் கிடைத்துள் ளது. இந்த தரவரிசையானது, ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகள், மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகா தாரம், ஊழல் அளவு, ஆயுட்காலம் போன்றவைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் ராக்கெட்

 இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சிறீஅரிகோட்டா, மார்ச் 21 இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான எல்விஎம்3 ராக்கெட் வருகிற 26ஆம் தேதி அன்று 2ஆவது முறையாக வணிகப் பயணத்தை மேற்கொள்கிறது.

சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி மய்யத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் 26ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 

ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மற்றும் தேதியையும் இதுதொடர்பான படங்களையும் இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தின் 5 ஆயிரத்து 805 எடையுள்ள 36 செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி இஸ்ரோ வணிக ரீதியான ராக்கெட்டில் 

36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment