தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்

சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (20.3.2023) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 

துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:

பள்ளிக்கல்வித்துறை ரூ. 40,299 கோடி, உயர்கல்வித் துறை ரூ. 6,967 கோடி, மருத்துவத்துறை ரூ. 18,661 கோடி, அண்ணல் அம்பேத்கர் திட்டம் ரூ. 1000 கோடி, ஆதி திராவிடர் நலத்துறை ரூ. 3,513 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ. 1,444 கோடி, பிற்பட்டோர் நலத்துறை ரூ. 1,580 கோடி, காலை உணவு திட்டம் ரூ. 500 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டம் ரூ. 1,500 கோடி, மகளிர் சுய உதவி குழு கடன் ரூ. 30,000 கோடி, பொது வினியோக உணவு திட்ட மானியம் ரூ. 10,500 கோடி, கூட்டுறவுத் துறை ரூ. 16,262 கோடி, விவசாயம் மற்றும் நகை கடன் தள்ளுபடிக்கு ரூ. 3,993 கோடி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ரூ. 1,248 கோடி, கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 2000 கோடி, கோவை செம்மொழி பூங்கா ரூ. 172 கோடி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ஆம் கட்டம் ரூ. 7,149 கோடி, கிராமங்களில் நீர்நிலைகள் புதுப்பிக்க ரூ. 800 கோடி, ஊரக வளர்ச்சித்துறை ரூ. 22,562 கோடி, நகராட்சி நிர்வாகத்துறை ரூ. 24,476 கோடி, நெடுஞ்சாலைத்துறை ரூ. 19,465 கோடி, மீனவர் நலன் ரூ. 389 கோடி, கூவம் அடையாறு மறுசீரமைப்பு ரூ. 1,500 கோடி, போக்குவரத்து துறை ரூ. 8,056 கோடி, சென்னை மெட்ரோ ரூ. 10,000 கோடி, கோவை மெட்ரோ ரூ. 9,000 கோடி, மதுரை மெட்ரோ ரூ. 8,500 கோடி, பள்ளி மாணவர் இலவச பேருந்து பயண திட்டம் ரூ. 1,500 கோடி, மகளிர் இலவச பேருந்து பயணம் ரூ. 2,800 கோடி, சிறு-குறு நடுத்தர தொழில்கள் ரூ. 1,509 கோடி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ரூ. 13,963 கோடி, தொழில் துறை ரூ. 3,268 கோடி, அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம் ரூ. 1000 கோடி, மின் திட்டங்கள் ரூ. 77,000 கோடி, சமூக நலத்துறை ரூ. 5,346 கோடி, சென்னை வெள்ளத்தடுப்பு ரூ. 320 கோடி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 7,000 கோடி


No comments:

Post a Comment