வேலியே பயிரை மேய்கிறது! கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

வேலியே பயிரை மேய்கிறது! கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது

சென்னை, மார்ச் 30- திரு வான்மியூர் பகுதியில் கோயில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ச்சகர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் அதே பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நிர்வாக தலைவராக உள்ளார். சித்தி விநாயகர் 

கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக குமார் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அர்ச்சகர் குமார் பணிக்கு வராமலும், எந்தவித தக வலும் தெரிவிக்காமலும் இருந் துள் ளார். எனவே சக்திவேல் கோயிலில்  உள்ள தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை சரிபார்த்த போது, 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சக்திவேல், திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளப்பட்டது. திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய் வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் கோயில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில் காவல்துறையினர் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி கோயிலில் திருடப்பட்ட 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட குமார், விசாரணைக்குப் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment