'நீட்' விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குடியரசுத் தலைவரின் பதிலை சுட்டிக்காட்டி சு.வெங்கடேசன் எம்.பி., தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

'நீட்' விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குடியரசுத் தலைவரின் பதிலை சுட்டிக்காட்டி சு.வெங்கடேசன் எம்.பி., தகவல்

சென்னை, மார்ச் 15- உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக நீட் விலக்கு மசோதா அனுப் பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளார் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனிதாக்களின் கல்வி உரிமை; குடியரசு தலைவரின் பதிலும் முதல்வரின் பெயர் சூட்டலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி யிருந்தேன்.

“உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக் கைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என குடியரசு தலைவர் பதிலளித்துள்ளார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழ்நாடு முதல மைச்சர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தமது பதிவில், “மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலை நாட்டுவதே" என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment