வேளாண் திட்டங்களால் 80 லட்சம் குடும்பங்கள் பயன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

வேளாண் திட்டங்களால் 80 லட்சம் குடும்பங்கள் பயன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை,மார்ச்29- தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவும், உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளன. வேளாண் திட்டங்களால் 80 லட்சம் விவ சாய குடும்பங்கள் பயன்பெறு கின்றன என்று சட்டப் பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் நேற்று பதில் அளித்து பேசியதாவது: வேளாண்மை துறைக்கென 3ஆவது முறை யாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர் களும் பாராட்டியிருப்பது சிறப்பு.

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைக ளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் சுமார் 80 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இதற்காக விவசாயிகள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி. இலவச மின்சாரத்தால் மட்டும் 23 லட்சம் விவசாயிகள் பயனடை கின்றனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த 22 மாதங்களில் 1.96 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. 1.20 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.73 லட்சம் டன் அதிகம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.98 கோடி நிவாரணமும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ரூ.116 கோடி நிவாரணமும் வழங்கப் பட்டது.

கலைஞர் ஆட்சிக் காலத் தில் கரும்பு சாகுபடி பரப்பு 2.25 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது குறைந்தது. தற்போது அரசு எடுத்த நடவடிக்கை களால் 1.50 லட்சம் ஹெக்டே ரில்கூடுதலாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

பேரவைத் தலைவர் அப் பாவு ஆண்டுக்கு 1 லட்சம் பனைவிதைகளை வழங்குகிறார். பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுபோன்ற உணர்வு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment