ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் 4ஆவது நாளாக முடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் 4ஆவது நாளாக முடங்கியது

புதுடில்லி, மார்ச் 17- எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அமளியில் ஈடு பட்ட தால், நாடாளுமன் றத்தின் இரு அவைகளும் 4ஆவது நாளாக நேற்றும் முடங்கின.

நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொட ரின் 2ஆ-வது அமர்வு கடந்த 13ஆ-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவை யில் மன் னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளு மன்றத்தில் வலியுறுத்தி வருகின் றன.

இதனால், கடந்த 13, 14, 15-ஆம் தேதிகளில் மக் களவை, மாநிலங் களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. மக்களவை யில் நேற்று (16.3.2023) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி தாக்கீது வழங்கினார். மற் றொரு காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி, ஒத்தி வைப்பு தீர்மான தாக்கீது அளித்தார்.

நேற்று காலை மக்க ளவை தொடங்கியது முதலே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங் களது கோரிக்கைகளை வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போதும், இதேநிலை நீடித் தது. இதன் காரணமாக நாள் முழுவதும் மக்க ளவை ஒத்திவைக்கப்பட் டது.

மாநிலங்களவை நேற்று  காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேநேரத்தில், காங்கி ரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரத்தை எழுப்பினர். திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவை யின் மய்யப் பகுதியில் கூடி கோஷமிட்டனர். இதனால், அவை தொடங் கிய 2 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. 

பிற்பகலில் அவை கூடியபோதும், இதே நிலை நீடித்தது. இதன் காரணமாக மாநிலங் களவையும் நாள் முழுவ தும் ஒத்திவைக்கப்பட் டது. இந்நிலையில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசா ரிக்க வலியுறுத்தி எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடா ளுமன்ற வளாகத்தில் நேற்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

ராகுல் பேட்டி

நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொட ரின் 2ஆ-வது அமர்வில் முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. வெளிநாட்டுப் பய ணத்தை நிறைவு செய்த அவர் நேற்று மக்கள வைக்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தி யாவை அவமதிக்கும் வகையில் நான் பேச வில்லை. அதானி குழுமத் துக்காக விதிகள் வளைக் கப்படுகின்றன. மும்பை உட்பட பல்வேறு விமான நிலையங்களின் ஒப்பந் தங்கள் அதானி குழுமத் துக்கு வழங்கப்படுகின் றன. இலங்கை, வங்க தேசம், ஆஸ்திரேலியாவி லும் அந்த குழுமத்துக்கே ஒப்பந்தங்கள் கிடைக் கின்றன. அதானி குழுமத் தில் எஸ்பிஅய் வங்கி பெருமளவில் முதலீடு செய்திருக்கிறது. இது எப்படி நடைபெறுகிறது? அதானியின் போலி நிறு வனங்களில் யாருடைய பணம் இருக்கிறது? இவ் வாறு ராகுல் தெரிவித் தார்.

பாரத ஒற்றுமை நடைபயணத்தின்போது சிறீநகரில் பேசிய ராகுல் காந்தி, “பெண்கள் இன்ன மும் பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்படு கின்றனர். பாதிக்கப் பட்ட பெண்கள் என்னி டம் முறையிட்டனர்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு டில்லி காவல்துறை சார்பில் ராகுல் காந்திக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை அளிக்கும்படி தெரி விக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment