காரைக்குடி நகராட்சியில் ஓராண்டில் ரூ. 46 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நகர்மன்றத் தலைவர் உரையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

காரைக்குடி நகராட்சியில் ஓராண்டில் ரூ. 46 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நகர்மன்றத் தலைவர் உரையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

காரைக்குடி, மார்ச் 21- காரைக்குடி நக ராட்சி மன்றக் கூட்டம் தலைவர் சே.முத்துத்துரை  தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் நா.குணசேகரன் முன்னி லையில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் லெட்சு மணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நகர் மன்ற தலைவர் சே.முத்துத்துரை "காரைக்குடி நகர்மன்றம் பொறுப் பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. 

கடந்த ஓராண்டு காலத்தில் காரைக்குடி நகரின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டு பணி களும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறிப்பாக நகரின் இரண்டாவது மின் மயானம் ரூ.1.16 இலட்சம் செலவில் பணிகள் துவங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் மக்களின் பயன்பாட் டுக்கு வரும்.

மேலும் தற்போது குடிநீர் வழங்கல் துறையில் அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் வித மாக தமிழ்நாட்டிலேயே காரைக் குடி, புதுக்கோட்டை, ராஜபாளை யம் ஆகிய மூன்று நகராட்சிகளை தேர்வு செய்த தமிழ்நாடு அரசு காரைக்குடி நகராட்சிக்கு மட்டும் ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீடு செய்ய துணை புரிந்த தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.‌ பெரியகருப்பன் அவர்களுக்கு இந்த மன்றத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக வும் குறிப்பிட்டார்.

இத்தனைக்கும் அடிப்படை காரணமாகத் திகழும் ‘திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் தள பதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காரைக்குடி நகர மக்களின் சார்பி லும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என் றும் கூறினார்.

No comments:

Post a Comment