'கோவிந்தா, கோவிந்தா!' திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.4.31 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

'கோவிந்தா, கோவிந்தா!' திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.4.31 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி நடவடிக்கை

திருமலை, மார்ச் 30 திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.4.31 கோடி அபராதம் விதித் துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள திருப் பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர் களையும், யூரோக்களையும், தினார் களையும் காணிக்கையாக உண்டிய லில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரங்களை தேவஸ் தானம் அறியமுடிவதில்லை. 

ஆனால், இப்படி உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கரன் சிகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கிறது. இதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வெளி நாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்வது அவசியம். 

பின்னர் ஒவ் வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறைஅந்த பதிவை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கரோனா பரவல் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் பதிவை புதுப்பிக்க தவறிவிட்டது. ஆதலால், கடந்த 2019-ஆம் ஆண்டுக்காக ரூ. 1.14 கோடியும், இந்த ஆண்டு மார்ச்5-ஆம் தேதி வரை மேலும் ரூ. 3.17கோடி என மொத்தம் ரூ. 4.31 கோடிஅபராதத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. தேவஸ்தானத் திடம் ரூ.26 கோடி மதிப்பிலான வெளி நாட்டு டாலர்கள் கடந்த 3 ஆண்டு களாக வங்கியில் டெபாசிட் செய் யப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment