3 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்னர் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு ஒன்றிய மோடி அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

3 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்னர் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு ஒன்றிய மோடி அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை,மார்ச் 3- சமையல் எரிவாயு உருளை விலையில் மேலும் ரூ.50  உயர்வு குறித்து ஒன்றிய மோடி அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை , அதே போல் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மோடி அரசு மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

வீட்டு பயன்பாட்டு எரிவாயு விலை உருளைக்கு 50 ரூபாயும், வணிக பயன் பாட்டு உருளைகளுக்கு ரூ.350 உயர்த் தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்தியிருப்பது மோசடியான செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது.

சென்னையில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1118.50 காசுகளும், உணவகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படும் வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.2268 ஆகவும் உயர்த்தி யிருப்பது என்பது பொறுப்பற்ற நடவடிக்கை என்பதோடு, நடுத்தர, ஏழை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

ஒன்றிய அரசின் மிக மோசமான சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை வன்மையாகக் கண்டிப்ப துடன் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.


No comments:

Post a Comment