தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது

சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில் மின் பயன்பாடு அதி கரிப்பு காரணமாக, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053 மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது.

இந்த தேவை, எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப் பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு கடந்த 15ஆம் தேதி 17,749 மெகாவாட் டாக இருந்தது’’ என்று தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டிய நிலையில், வரும் நாட்களில்வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

இதனால், தினசரி மின்தேவை19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் அதிகரிக்கும் மின் தேவையைப்பூர்த்தி செய்ய, மின் வாரியம் அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உ.பி.யில் 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள்: 178 பேர் உயிரிழப்பு

லக்னோ, மார்ச் 18- உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில்178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த 2017 முதல் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட் டுள்ளன. இதில், 178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அம்மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக மீரட் காவல் சரகத்தில் 3,152 என்கவுன்ட் டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 63 குற்றவாளிகள்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 1,708 பேர் காய மடைந்துள்ளனர். ஆக்ரா காவல் சரகத்தில் 1,844 என் கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 258 பேர் படுகாயம் அடைந்தனர். பரேலி காவல் சரகத்தில் 1,497 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 437 பேர் படுகாயம் அடைந்தனர்.


No comments:

Post a Comment