கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் (14.3.1883) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் (14.3.1883)

1848ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்த நேரம் குழந்தை தொழி லாளர் என்பது விதி யாக இருந்தது.  

2016 ஆம் ஆண்டு பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழி லாளராக இருக்கிறது என்று பன்னட்டு தொழி லாளர் அமைப்பு புள்ளி விபரம் கூறியது. தொழிற் சாலைகளில் இருந்து பள்ளிக்கு இந்த அளவு குழந்தைகள் செல்லத் தொடங்கியதற்கு மார்க்ஸ் சிற்கு அந்த குழந்தைகள் கடமைப்பட்டுள்ளன. மார்க்ஸ் சிந்தனைகள் இன்று நமக்கு உதவுவது எப்படி என்று நூலாசிரியர் லிண்டா யுவே கூறுகிறார், 

"மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் 1848இன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து அம்சங்களில் ஒன்று, அனைத்து குழந்தை களுக்கும் பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி, தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது என்பதாகும்." ''குழந்தைகளின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது மார்க்ஸ், மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிளம்பிய குரலுக்கு வலு சேர்த்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ட்டது. இளம் குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணி புரிய அனுமதிக்கப்படவில்லை," என்கிறார் யுவே.

மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான்

மதம் மனிதனை உருவாக்குவதில்லை

மக்களின் மகிழ்ச்சிக்கு முதலில் தேவையானது மதத்தை ஒழிப்பதாகும்.

- கார்ல் மார்க்ஸ்


No comments:

Post a Comment