தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி!

பெரியாருடைய தொழிலாளர் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ளுமுன், பெரியாருக்குத் தொழிலாளர் தொடர்பாகவும் பொது உடைமைக் கருத்துகள் பற்றியும் உள்ள தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளுவது நலமாகும். பெரியார் ரஷ்யப் புரட்சி 1917 இல் தோன்றுவதற்கு முன்னரே தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கின்றார், உடையார்பாளையம் பருக்கலில் 03.06.1973இல் நிகழ்த்திய சொற்பொழிவில் இது தொடர்பான தம்முடைய நடைமுறைகளைக் குறித்துப் பேசி இருக்கின்றார்.

“தொழிலாளர்களைத் தொழிலில் பங்குதாரராக ஆக்க வேண்டுமென்ற கொள்கையை என் வியாபாரத்தில் 1900த்தில் - அதாவது 73 ஆண்டுகளுக்கு முன் அனுசரித்தேன். என் கடையில் இருந்த மூன்று பேர்களைக் கஷ்டக் கூட்டாளிகளாக ஆக்கினேன். அவர்களுக்கு மாதம் தலா ரூ.10-8-7 சம்பளமாகும். வியாபாரத்திற்கு முதல் ரூபாய் பத்தாயிரம். இலாபத்தில் முதலாளி என்கிற எனக்கு ஒரு பாகம். என் முதலுக்கு ஒரு பாகம். கஷ்டக் கூட்டாளிகள் மூவருக்கும் ஒரு பாகம் என்று அமல்படுத்தினேன். அதாவது என் கடையில் வரும் லாபத்தை 49 பாகமாகப் போட்டு ஒரு பாகம் சாமி கணக்குக்கும், 16 பாகம் எனக்கு பணப் பொறுப்புக்காகவும், 16 பாகம் - முதலீட்டுப் பணத்திற்காகவும், மீதி. 16 பாகம் கஷ்டக் கூட்டாளிகளுக்கு என்றும் பிரித்துக் கொடுத்தேன்.” 

தொழிலாளர் பிரச்சினை தீர இதுவே சிறந்த வழி என அப்போது முதல் கூறிவருகின்றேன்.

No comments:

Post a Comment