செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது

நாசா உருவாக்கிய கார் போன்ற வடிவிலான ரோபோவான “கியூரியா சிட்டி ரோவர்” 2011ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத் திற்கு அனுப்பப்பட்டது. 2012 ஆகஸ்ட் 6 அன்று  56 கோடி கி.மீ. பயணத்துடன் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தை வந்தடைந்த கியூரியாசிட்டி ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் மலை யின் அடிவார நிலத்தில் உடைப்பை கண்டறிந்த நிலையில், தற்போது பாறைகளின் படங்களை எடுத்து, நீர் அலைகள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது. கியூரி யாசிட்டி ரோவர் வெளியிட்டுள்ள படத்தில் ஒரு கடற்கரையில் அலைகள் குறைவதால் விட்டுச்செல்லும் அலை அலையான வடிவங்களைப் போன்ற தடங்கள் உள்ளன. அவை பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற ஏரியின் மேற்பரப்பில் அலைகளால் உருவாக்கப்பட்டிருக் கலாம் என “கியூரியாசிட்டி ரோவர் மிஷன்” விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏரியின் மேல் கியூரியாசிட்டி ரோவர் நகர்வதால் கீழே இருந்து வண்டல் படிந்ததால் பாறைகளில் காணப்படும் சீப்பு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. நாசாவின் கியூரியா சிட்டி திட்ட விஞ்ஞானி அஷ்வின் வாசவாடா ஒரு அறிக்கையில், “கியூரி யாசிட்டி ரோவரின் முழு பயணத்திலும் நாம் பார்த்த நீர் மற்றும் அலைகளின் சிறந்த சான்று இது வாகும். கியூரியா சிட்டி ரோவரின் கண்டு பிடிப்பு ஆச்சரி யமாக உள்ளது. தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதி  வறண்ட பகுதி யாக இருக்க வேண்டும். ஏனென்றால்,  மற்ற பகுதிகளை விட வறண்ட அமைப்புகளில் பாறை அடுக்குகள் வேகமாக வளரும். சல்பேட்டுகள் அல்லது உப்பு தாதுக் களால் தண்ணீர் வறண்டு போகும்போது மேற்பரப்பில் அலைகளால் உருவாக்கப் பட்டிருக் கலாம் என நம்பப்படுகிறது.  இது போன்ற ஆதாரங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால் வறண்டு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த இடத்தில் தண்ணீர் இருப்பதாய் கண்டுபிடிப்பது ஆச்சரிய மாக இருக்கிறது” என்று வாசவடா கூறினார்.

No comments:

Post a Comment