Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இந்திய சட்டசபை
February 25, 2023 • Viduthalai

மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ் நாட்டில் இந்திய சட்டசபைத் தேர்தல் விஷயத்தில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.

அதாவது கோவை ஜில்லாவிலும் சேலம் ஜில்லாவிலும் கொங்கு வேளாள சமூகம் அதிகமாக உண்டு. இந்த இரண்டு ஜில்லாவில் உள்ள வேளாள சமூகம் ஒரு வேளாள சமூக அபேட்சகரைத்தான் ஆதரிப்பார்கள். வேளாள சமூகத்தில் ஒரு அபேட்சகர் இல்லை என்கின்ற காரணத்தினாலேயே கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்டு, தோழர் வெள்ளியங் கிரிக் கவுண்டர் தனது ஜில்லா போர்டு ஸ்தாபனத்தின் பயனாய் உள்ள செல்வாக்கைத் தோழர் அவினாசிலிங்கத் துக்காகப் பயன்படுத்துவதாகவும், கோவை ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்டும் கொங்கு வேளாள குலத் தலைவரும், மடாதிபதியுமான பழையகோட்டைப்பட்டக்காரர் அவர்கள் தனது செல்வாக்கை டாக்டர் வரதராஜுலு அவர்களுக்குப் பயன்படுத்துவதாகவும் வாக்களித்து இருந்தார்கள். இதன் பயனாக கோவை, சேலம் ஜில்லா, வேளாள சமுக ஓட்டுகள் இவ்விருவருக்குமே சற்றேக்குறைய சரிசமமாகப் பிரிந்து போகக் கூடிய நிலையில் இருந்து வந்தது.

இப்போது டாக்டர் சுப்பராயன் அவர்கள் சீமையிலிருந்து வந்து தோழர் ராதாபாய் அம்மாளின் அபேட்சக ஸ்தானத்தை உறுதிப்படுத்தி மேல் கண்ட இரண்டு கனவான்களையும் சென்று பார்த்ததில் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டரும், பட்டக்காரர் அவர்களும் தோழர் ராதாபாய் அவர்களை ஆதரிப்பதைப் பற்றி டாக்டர் சுப்பராயனுக்குத் தைரியம் சொல்லிவிட்டதாகத் தெரிகின்றது.

இது மாத்திரமல்லாமல் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண் டர் அவர்கள், தோழர்கள் அவினாசிலிங்கம் செட்டியாருக் கும், ராஜகோபாலாச்சாரியாருக்கும் இது விஷயத்தைத் தெரிவிக்கப் போவதாகவும், பட்டக்காரரவர்களும் டாக்டர் நாயுடு அவர்களுக்கு எழுதி விடுவதாகவும் டாக்டர் சுப்ப ராயன் அவர்களிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதன் பயனாய் தேர்தல் நிலைமை மாற்றமடைந்தே தீரும். இதன் பயனாகத் தோழர்கள் அவினாசிலிங்கமும், நாயுடுவும் தங்கள் அபேட்சகர் தானத்திலிருந்து விலகிக் கொள்ளு வார்களோ அல்லது நடந்தது நடக்கட்டும் என்று துணிந்து நிற்பார்களோ தெரியாது.

டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தத் தொகுதியை ஒரு பெண் அபேட்சகருக்காக எல்லாக் கட்சியார்களும் போட்டி இல்லாமல் விட்டுவிட வேண்டும் என்றும், இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு பெண்தான் இந்திய சட்டசபைக்கு நிற்க சகல விதத்திலும் தகுதியோடு முன் வந்திருப்பதாகவும், இதன் பயனாய் காங்கிரஸ் பெண்கள் விஷயத்தில் கொண் டுள்ள கொள்கையைக் காட்ட ஒரு சந்தர்ப்ப மேற்பட்டிருக் கிறதென்றும், தோழர் ராஜகோபாலாச் சாரியாருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது. இதனாலெல்லாம் தான் அபேட்சகர்கள் தன்மை மாறுபட்டாலும் மாறுபடக்கூடும் என்று எதிர்பார்ப்பு மேற்படு கின்றது.

மற்றும் ஒரு விஷயம். அதென்னவெனில் டாக்டர் நாயுடுவைத் திருச்சி பொதுக்கூட்டத்தில் டாக்டர் சுப்பராயன் மனைவியார் கோவைத் தொகுதிக்கு ஒரு அபேட்சகராய் நின்றால் அப்போது உங்கள் நிலை என்ன? என்று ஒருவர் கேட்டார்.

அதற்குப் பதிலளிக்கையில் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் நிற்பதாய் இருந்தால், எனக்கும், அந்தம்மாளுக்கும் போட்டி இல்லாமல் இருக்கும்படியாக நடந்து கொள்ள முயற்சிப்பேன். எங்களுக்குள் போட்டிப் பிரச்சாரம் நடக்க இடம் வைத்துக்கொள்ள இஷ்டமில்லை என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது.

ஒரு சமயம் தோழர் ராதாபாயம்மாள் விஷயத்தில் நாயுடு ஒப்புக் கொண்டு காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லையா னால், ராதாபாயம்மாள் வேறு தொகுதியில் நின்று கொண்டு கோவை, சேலம், ஜில்லா வேளாள சமூக ஓட்டுகளை டாக்டர் நாயுடுவுக்கு அனுகூலமாய்த் திருப்ப முயற்சி செய்யப் போவதாயும், தெரிய வருகின்றது.

தோழர் ராதாபாயம்மாளுடன் போட்டி போட விரும்ப வில்லை என்று எப்படி டாக்டர் நினைக்கிறாரோ, அது போலவே செங்கல்பட்டு தென்னாற்காடு ஜில்லா தொகுதியில் அபேட்சகராய் இருக்கும் திவான் பகதூர் எம்.கே. ரெட்டியாரும் ராதாபாயம்மாள் நிற்பதாயிருந்தால் போட்டி போட விரும்பவில்லை என்பதாய்த் தெரிகிறது. அப்படியா னால் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகரும் அம்மாள் விஷயத்தில் போட்டி போட மாட்டார்கள். இவர்கள் இருவரும் போட்டி போட முன் வரவில்லையானால் மிஞ்சுவது தோழர் முத்து ரங்க முதலியாரே ஆவார்கள். அவர் நிற்பதும் ஒன்றுதான் உட்காருவதும் ஒன்றுதான். ஆதலால் அந்தத் தொகுதியிலும் ராதாபாயம்மாளுக்குச் சுலபமாக ஆகக் கூடும்.

இப்படியும் ஒரு உத்தேசம் இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ஏதோ ஒரு விதத்தில் அசெம்பளி தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படக் கூடும் என்று தெரிகிறது.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn