Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மார்க்கட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
February 25, 2023 • Viduthalai

தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.

பெண்கள்

செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப் போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராள மாய் கிடைக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் சுயமரி யாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டு சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளி நாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய்ச் செட்டி மார்களும் சர்க்காருக்கு (சமூகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமூகத்தார்) வரி போடுவார்களா னால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமூகத்தாருக்கு) தெரிவித்து இருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுகள்

முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம். பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனி சிபல் ஓட்டுகளுக்கு கிராக்கியற்று சில இடங்களில் அவ்வள வையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந் தனர். நல்ல வேளையாய் அந்த உத்தரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் தேர்தல் இந்த வரு ஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.

ஈரோடு

குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் செலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேட்சகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது.

சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப் பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை. சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.

சில வார்டுகளில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப் படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷ யத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.

சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேட்சகர் 3000 ரூபாய் எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேட்சகர் 5000 ரூபாய் எடுத்து வைத்து எல க்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்குப் பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும்.

ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஒட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய்? மார்க்கண்டன், அனுமார், விபூஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல. சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக் கின்றனர்.

ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திரமல்லாமல் கோவில்கட்ட, மசூதி கட்ட, சர்ச் சட்ட, என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.

நல்ல வேலையாக ஈரோட்டைப் பொறுத்தவரை ஓட்டுகளுக்கு ஜாதிச் சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மனுக்கே சேர வேண்டியது.

- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn