ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு அவமதிப்பு - தமிழ்நாடு மாணவர்கள்மீது தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்துக்கு அவமதிப்பு - தமிழ்நாடு மாணவர்கள்மீது தாக்குதல்

முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடில்லி, பிப்.21 டில்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி.யினர் தாக் குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாடு அரசியல் தலை வர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மும்பை அய் .அய். டி.யில் ஜாதிய வன்மத்தால் தன்னுயிர் மாய்த்துக் கொண்ட தாழ்த்தப்பட்ட சமு கத்தைச் சேர்ந்த மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடது சாரி மாணவர் அமைப்பினர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தில்  ஊர்வலம் சென்றனர். அய்.அய்.டி. வளாகங்களில் தாழ்த்தப் பட்ட, இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் அய்யத்திற் கிடமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள ஜாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடது சாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களின் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த மாண வர்கள் என தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யூ-வில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

 இந்த நிலையில் சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது போலி யான காரணத்தைக் கூறி ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினராக ஏ.பி.வி.பி. அமைப்பினர், ஆவணப் படம் திரையிடப்படவிருந்த அரங் கிற்கு சென்று அங்கிருந்த மற்ற மாண வர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அவர்கள் அங் கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங் களை அடித்து சேதப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலில், தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் உள் பட பலர் படுகாயமடைந்தனர். தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களை ஆம்பு லன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் முயன்ற நிலையில், அவர்களை மறித்து ஏ.பி.வி.பி.யினர் தடுத்ததாக வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக டில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் ஏபிவிபியினர் மீது தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அரசியல் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்..  

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கை யில்,  “பல்கலைக் கழகங்கள் என்பது கற் பதற்கு மட் டுமல்ல; விவா தங்கள், கலந்தாலோசனைகள் ஆகிய வற்றுக்கும்தான். அப்படியிருக்க, ஜேஎன்யு வில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத் தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப் படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  குற்ற வாளிகள்மீது பல்கலைக்கழக நிர் வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.  ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய பாஜக ஆட் சியை விமர்சித்ததற்காகவும், தங் களது உரிமைகளுக்காகப் போராடியதற் காகவும் மாணவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்பட்ட வன்முறையை, பார்வையார்களாக பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்துள்ளன ஜேஎன்யு நிர்வாகமும்,  டில்லி காவல்துறையும். குற்ற வாளிகள்மீது நடவடிக்கை எடுக் கவும், தமிழ்நாடு மாணவர்களை பாதுகாக்கவும் கல் லூரி துணை வேந்தரை கேட்டுக்கொள் கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ   

“பிப்ரவரி- 19ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’ என்ற பெயரில் பெரியாரின் கருத் துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட் களையும் சேதப் படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாண வர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுஉடைமைத் தலைவர்களை இழிவு படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன் முறையை ஏவி, தந்தை பெரியார்   உருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறி யுள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

“பெரியார்,மார்க்ஸ் படங்கள் அவமதிப்பு! தமிழ்நாட்டு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்! ஏபிவிபி குண்டர்களின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! வன்முறையில் ஈடு பட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது சட் டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியு றுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

“டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேத மாக்கப்பட்டுள்ளது'' என்று தன் னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment