மேகாலயாவில் பா.ஜ.க மூன்று இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் எச்.பாலா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

மேகாலயாவில் பா.ஜ.க மூன்று இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் எச்.பாலா

ஷில்லாங், பிப். 26 - “மேகாலயா மாநிலத்தில், பாஜக மூன்று இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை” என்று அம்மாநில காங்கி ரஸ் தலைவர் வின்சென்ட் எச். பாலா தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில் வின்சென்ட் எச். பாலா மேலும் கூறியிருப்பதாவது: 

தங்களுக்கு வாக்க ளிக்கவில்லை என்றால்  தண்டிக்கப்படுவார்கள் என்று பாஜக மேகாலயா மக்களை மிரட்ட முயல் கிறது. ஆனால் மேகா லயா மக்கள் பாஜக-வை விட புத்திசாலிகள். அவர் களுக்கு (பாஜக) அதிக இடங்கள் கிடைக்கும் என்று நான் நினைக்க வில்லை. கடந்த முறை காங்கிரஸ் திடீரென பிள வுபட்டதால் அவர்கள் வந்து  விட்டார்கள். ஆனால் இந்த முறை நாங் கள் நன்றாக தயாராகி விட்டோம். இனி அப்படி நடக்கும் என்று நான்  நினைக்கவில்லை. 

கடந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நிலக் கரி சுரங்கத்தை அனுமதிப் பதாகவும், வேலைவாய்ப்பு தருவதாகவும், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்து வதாகவும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை. மேகா லயாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது அதிகமாக உள்ளது போல் எப்போதும்  இருந்த தில்லை. மேகாலயா வரலாற்றில் முதல் முறை யாக போதைப் பொருட் கள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கு கிட்டத் தட்ட சீர்குலைந்துள்ளது. ஊழல் மிக அதிகமாக உள்ளது. கோவிட் சமயத் தில் சுகாதார துறையிலும் கூட  ஊழல் இருந்தது.  

இன்று அவர்களிடம் (பாஜக) எந்த கொள்கை யும் இல்லை. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கி றார்கள். பாஜக மூன்று இடங்களுக்கு மேல் தாண்டும் என்று நான்  நினைக்கவில்லை. இரட்டை இலக்கம் என்ற கேள்வியே எழாது. மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகு தியில் 36 முதல் 37 இடங் களில் போட்டியிடும் நல்ல நிலையில் காங்கிரஸ் உள்ளது. நாளுக்கு நாள் நாங்கள் முன்னேறி வருகி றோம். மேலும் காங்கிரஸ் கட்சி மேஜிக் எண்ணான 30-அய் தாண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்வரும்  மேகாலயா தேர்தலில் புதிய முகங்க ளுடன் காங்கிரஸ்  போட் டியிடுகிறது. மேகாலயா வில் அடுத்து காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு வின்சென்ட்  எச். பாலா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment