ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

1.கேள்வி: நீதித்துறை மீதான நம்பிக்கையும் சிதைந்துவிட்ட நிலையில் தேர்தல் பாதையில் மட்டுமே மதவாத சக்திகளை வீழ்த்த முடியும் என்று நம்பலாமா?

                                                                                        - பழனிவேல், ஆதிவராகநல்லூர்

பதில்: மக்கள் மன்றம்தான் இறுதித் தீர்ப்பளிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, முனைப்புடன் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் 2024இல் விடியல் கிட்டுவது உறுதி!

மக்கள் தயாராகி விட்டார்கள். தலைவர்கள் என்போர் தயாராக வேண்டும். இன்றேல் வரலாற்றுப் பிழையும், பழியும் ஏற்படும்.

                                                                              ---

2.கேள்வி: பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மூன்றாண்டுகளில் மூன்று லட்சத்து 44 ஆயிரம் பேர்  தற்கொலை செய்துள்ளனரே! பாஜக அரசு கட்டமைக்க விரும்பும் தேசம் இது தானா?

                                                                                       - த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: மில்லியன் டாலர் கேள்வி. பிரதமருக்கும், அவரது ஆட்சிக்கும் அர்ப்பணிக்க வேண்டிய கேள்வி இது

                                                                          ---

3.கேள்வி: சமூக நீதி பாதுகாப்புப் 3.பெரும்பயணம் குறித்து வரும் செய்திகளை படித்து மகிழ்கிறோம்.  வெளி மாநில தொழிலாளர்களால் ஏற்படும் தொல்லைகள் பற்றி பேசப்படுகிறதா?

                                                                                         - சிற்றரசு, உல்லியக்குடி

பதில்: பேசும் பொருள்களில் இதுவும் இடம் பெறும்!

                                                                       ---


4.கேள்வி: பிரபாகரனை உயிர்ப்பிப்பதன் பின்ணணி என்ன?

                                                                    - செந்தமிழ்ச்செல்வன், கொடுங்கையூர்

பதில்: போகப் போகத் தெரியும்!

                                                                        ---


5.கேள்வி: அதானியின் மோசடிகள் அம்பலமானாலும் ‘ஹசாரே’களும், ‘கிரண்பேடி’களும், ‘கெஜ்ரிவால்’களும் விழிக்கவேயில்லையே?

                                                                           - அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: எப்படி விழிப்பார்கள்? அவர்கள் எல்லாம் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.இன் பி, சி, டி ‘டீம்’களாயிற்றே!

                                                                     ---


6.கேள்வி: தமிழ்நாட்டில் ஆங்காங்கே தீண்டாமைக் கொடுமைகள் தலைத் தூக்குகின்றனவே?

                                                                                        - பிரபாகரன், அரக்கோணம்

பதில்: 1. இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். 2. தீவிரப் பிரச்சாரமும் தேவை!

                                                                    ---


7.கேள்வி: ஆன்மீக உபன்யாசங்களும், புராண தெருத் கூத்துகளும் கிராமங்களில் அதிகம் நடக்கும் நிலையில் கிராமங்களுக்கான உங்கள் இயக்கத்தின் வேலைத்திட்டம் என்ன?

                                                                                    - நித்தியா, வளசரவாக்கம்

பதில்: பிரச்சார வியூகங்கள் உண்டு. அதை ஏப்ரல் 2023 முதல் பார்ப்பீர்கள். உங்கள் பங்கு என்ன? உங்களைப் போன்றோர் ஆதரவும் தர முன்வர வேண்டாமா?

                                                                              ---


8.கேள்வி: தமிழ்நாடு அரசில் தற்போது சமூக சீர்திருத்தத்துறை இயங்குகிறதா?

                                                                      -தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: தமிழ்நாடு அரசுக்கு இது அர்ப்பணிக்கப்படும் கேள்வி. விரைவில் விடை கிடைக்க வேண்டும்.

                                                                      ---


9.கேள்வி: இராகுல் காந்தியின் நடைப்பயணம் எப்படி முடிந்துள்ளது? பயனுள்ளதா?

                                                                                           - அழகானந்தம், அரியலூர்

பதில்: நிறைந்த பயன் விளைவிக்கும் என்பது உறுதி!

                                                                       

                                                                         ---

                                                                                   

 10.கேள்வி: வடகிழக்கு மாகாணங்களில் கிறித்தவப் பழங்குடி மக்களை எஸ்.டி. பட்டியலில் இருந்து நீக்க ஆர்.எஸ்.எஸ். இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல்கள் வருகின்றனவே?

                                                                                  - அயன்ஸ்டின், சோழங்குறிச்சி

பதில்: இது ஒரு வகையில், அவர்களது முகமூடி கழலுவதை மற்றவர்கள் - உலகம் காணும் அரிய வாய்ப்பைத் தரும்.

                                                                   ---


No comments:

Post a Comment