அமெரிக்க நாட்டு விஸ்கான்சின் மாநிலத்திலிருந்து டான் பார்க்கர், தான் எழுதிய புத்தகத்தினை தமிழர் தலைவருக்கு அனுப்பி உள்ளார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

அமெரிக்க நாட்டு விஸ்கான்சின் மாநிலத்திலிருந்து டான் பார்க்கர், தான் எழுதிய புத்தகத்தினை தமிழர் தலைவருக்கு அனுப்பி உள்ளார்


கடந்த ஜனவரி 5ஆம் நாள் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்த, அமெரிக்கா நாட்டு மத மறுப்பாளர் டான் பார்க்கர் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினார். அமெரிக்க நாட்டு ‘மதத்திலிருந்து விடுதலை' அறக்கட்டளையின் இணை நிறுவனரான டான் பார்க்கர் அவருடன் பணிபுரியும் அமிதாப் பால் மற்றும் மராட்டிய மாநில மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நிறுவிய மகாராட்டிர அந்த்ஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் இன்றைய தலைவர் அவினாஷ் பாட்டில் ஆகியோருக்கு பெரியார் திடலில் பாராட்டுதலும் அவர்கள் பங்கேற்பு டன் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ஒரு சிறப்புக் கருத்தரங்கக் கூட்டமும் நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் டான் பார்க்கர் தான் எழுதிய, GOD - The Most Unpleasant Character in All Fiction (கடவுள் - அனைத்துப் புனைவு நூல்களிலும் பெரிதும் விருப்பப்படாத ஒரு கதைப் பாத்திரம்) புத்தகத்தினை அனுப்பி வைப்பதாக தெரி வித்திருந்தார்.

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்றதும் தான் எழுதிய புத்தகத்தினை தமிழர் தலைவருக்கு விமான அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களுக்குக் கடிதம் எழுதி, புத்தகத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

டான் பார்க்கர் தமிழர் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள புத்தகத்திற்கு ரிச்சர்டு டாக்கின்ஸ் அணிந்துரை வழங்கியுள்ளார். அறிவியலாளரும், சீரிய நாத்திக சிந்தனையா ளருமான ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய Delusion’எனும் புத்தகத்தின் தமிழாக்கத் தினை ‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ எனும் தலைப்பில் (பெரியார் பேருரையாளர் 

கு.வெ.கி.ஆசான் மொழிபெயர்த்தது) பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பிரசுரித்து பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது பலரும் அறிந்தது.

அமெரிக்காவிலிருந்து டான் பார்க்கர் அவர்கள் அனுப்பியுள்ள புத்தகத்தினைப் பெற்றுக் கொண்டதற்கு தமிழர் தலைவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment