புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று (1.2.2023) தாக்கல் செய்த பொது நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30% குறைந் துள் ளதற்கு இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கிராமப்புற ஏழை மக்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தர வாத திட்டம் என்றறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் எனும் இந்தியச் சட்ட மானது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று இயற்றப் பட்டது. இது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கொள்கைகளின் 41ஆவது சரத்தின் கீழ் வரும் வேலைக்கான உரிமையை ஆதாரமாகக் கொண்டது.
இச்சட்டமானது கிராமப்புற குடும்பங்களில் உள்ள திறன் சாரா உடல் உழைப்பில் ஈடுபட விருப்பமுள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களுக்கும் ஆண்டிற்கு அதிகபட்சமாக 100 நாட்கள் ஊதிய வேலை வாய்ப் பிற்கு உத்தரவாதம் அளிக்கின் றது. இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகளுடன் இணைந்து இச்சட்டத்தின் செயல்பாடு களை கண்காணித்து வருகின் றது. உலக வங்கியானது அதன் 2014 ஆம் ஆண்டிற்கான “உலக மேம்பாட்டு அறிக்கையில்” இத்திட்டத்தினை “கிராமப்புற வளர்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது.ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடை பெற்று வருகின்றன. முறையாக பணிகள் செய்யப்படுவது இல்லை என்றும், அதற்கான ஊதியமும் முறையாக கொடுப் பதில் முறைகேடுகள் நடை பெறுவதாகவும் குற்றச்சாட் டுக்கள் உள்ளன. இதுதொடர் பான வழக்குகளும் உள்ளன. ஆனால், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' பேருதவியாக இருந்து வருகிறது. இதனால் பல கோடி பேர் தங்களின் வாழ்க்கை கழித்து வருகின்றனர்.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் 30சதவிகிதம் நிதியை குறைத்துள்ளது. இது அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்துக்கு கடந்த 2021_20-22ஜிம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 98,468 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2022-_2023 பட்ஜெட்டில், அது 73000 கோடியாக குறைக்கப்பட்டது. இது கடுமை யான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு (2022-_2023) பட் ஜெட்டில், இதற்கான நிதி ஒன்றியஅரசு உயர்த்தியது. அதன்படி, 89,400 கோடியாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அதற்கான நிதியை 30 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளது. அதாவது, 60ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 29,400 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment