திருமருகலில் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

திருமருகலில் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் கலந்துரையாடலில் தீர்மானம்

திருமருகல், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட் டம் நாகை மாவட்டம் திருமருகலில் 6-.3.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 31-.1.-2023 அன்று மாலை 3.30 மணி அள வில் திருப்புகளூர் பொன். செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் வருகை குறித்தும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை களை வழங்கினார்.

மண்டல திராவிடர் கழக தலைவர் கி.முருகையன், மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் விஎஸ்டிஏ நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா முன்னிலை வகித்து உரை யாற்றினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை (3.-2.-2023 முதல் 10-.4.2023) தொடர்பயண பொது கூட்டத்தை 6.3.2023 அன்று திருமருகலில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2. பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை விளக்கி சுவர்எழுத்து விளம்பரங்கள், உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம், கடைவீதி வசூல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் கழகத்தோழர்கள் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப் படுகிறது

3. பரப்புரைப் பயண பொதுக்கூட்டத்தை திருமருகலில் நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு நன்றி தெரிவிப்ப துடன் திருமருகல் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட இளைஞர் அணி தலை வர் இராஜ்மோகன், மாவட்ட தொழிலாள ரணி செயலாளர் இராச.முருகையன் திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னத் துரை,மன்னை மாவட்ட துணைச்செயலாளர் புஸ்பநாதன் மருங்கூர் , முனிசாமி, நாகை ரவி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை யாற்றினர்.

மருங்கூர் காமராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment