பெங்களூரு மின்னணு நகரத்தில் சிறப்பு மிக்க பொங்கல் விழா - 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

பெங்களூரு மின்னணு நகரத்தில் சிறப்பு மிக்க பொங்கல் விழா - 2023

பெங்களூரு, பிப். 7- பெங்களூரு மின்னணு நகரத்தில் உள்ள கோத்ரெஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்களால், மிகச் சிறந்த முறையில் தமிழர்களின் பெருமைமிக்க விழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரனின் மகள் ரேவதி டேவிட் திலீபன் தலைமை, தனிஷ் பிரேம் சந்த் முன்னிலை வகிக்க, பிரியா அருண் வரவேற்புரையாற்றினார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும், கிராமப்புறச் சந் தையை நம் கண்முன் நிறுத்தும் வகை யில் திருவிழா கடைகள், ராட்டினம், மண் பானை செய்தல், பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் விற்கும் விற்பனைக் கூடங்கள்  சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

காலையில் குடியிருப்பைச் சுற்றி 

நம் தமிழ்நாட்டின் ஆதி தமிழர்களின் இசையான பறையிசை முழக்கத் துடன், நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையுடன் சிறார்கள், மகளிர், இளை ஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புடைசூழ திரளாக வந்திருந்து சிறப்பாக நடனமாடி மகிழ்ந்தனர்.

மாலையில் மீண்டும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. அதில், தமிழ்நாட் டைச் சேர்ந்த அதிர்வுகள்  கலைக் குழுவினர் வழங்கிய தப்பாட்டம், கர காட்டம், ஒயிலாட்டம்  போன்றவற்றை  ஆடி, அங்கிருந்தோரையும் ஆட வைத்து மகிழ்வித்தனர். மற்றுமொரு சிறப்பான நிகழ்வாக நேர்த்தியாக  அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மிகவும் உற்சாகமாக ஊர்வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழாவில் பங்கேற்ற தமிழர்கள், மறைந்து கொண்டிருக்கும் நம் பாரம் பரிய இசை, மற்றும் கொண்டாட்டமிக்க விழாக்களையும், வாழ்வியல் முறை யையும், கிராமத்தையும், மீட்டெடுத்து மீண்டும் கிராமத்திற்கே சென்று பொங்கல் விழாவினை கொண்டாடியது  போன்ற உணர்ச்சி மிக்க அனுபவத்தை பெற்றதாய் அகமகிழ்ந்தனர்.

விழாவின் நிறைவாக சுதா சியாம் விழா சிறப்புற தங்கள் ஒத்துழைப்பை நல்கிய அத்துணை நெஞ்சங்களுக்கும் தன் நன்றியுரையை வழங்கினார்.

No comments:

Post a Comment