சிவகாசி ம.சிவஞானம் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

சிவகாசி ம.சிவஞானம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

சிவகாசி நகரக் கழக காப்பாளர் பெரியார் பெருந்தகையாளர் ம.சிவஞானம் (வயது 85) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய் தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். 

கரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். அவரது உடல் விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாக வழங்கப்பட உள்ளது. அவருக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர்.

தோழர் சிவஞானம் அவர்களின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் ஆறுதலும் உரித்தாகுக!

- கி.வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், மறைந்த சிவஞானம் அவர்களின் மகன் ஆனந்தம் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் தெரிவித்தார்.


No comments:

Post a Comment