ஒன்றிய அரசில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

ஒன்றிய அரசில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு

ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : போர்மேன் பிரிவில் ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 4, கம்ப் யூட்டர் 2, எலக்ட்ரிக்கல் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டாலர்ஜி 2, டெக்ஸ்டைல் 2, வேலைவாய்ப்பு துணை இயக்குநர் 12, அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் மைன்ஸ் 47, லேபர் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.3.2023 அடிப்படையில் வேலைவாய்ப்பு துணை இயக்குநர் 40, அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் ஆப் மைன்ஸ் 35, லேபர் ஆபிசர் 33, மற்ற பிரிவுகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 2.3.2023

விவரங்களுக்கு:upsconline.nic.in


No comments:

Post a Comment