அண்ணாபற்றி...!
அறிஞர் அண்ணா வைப் பற்றி இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தனது பன் னாட்டுப் பதிப் பில்,ஆங்கில மொழியில் அண்ணா குறித்து அழகிய எளிய கட்டுரை வடித்துள்ளது.
அந்தக் கட்டுரையை மேலும் 18 (பதினெட்டு) மொழிகளில் வெளியிட்டும் சிறப்பித்துள்ளது. அந்த மொழிகள் இவை :
1. தமிழ், 2. ஹிந்தி, 3.அரபி மொழி,4. வங்க மொழி 5.ஜெர்மானிய மொழி 6. ஈரானின் மொழி யான பாரசீக மொழி,
7. French- பிரெஞ்ச்,
8. Indonesian- இந்தோ னேசிய பாலினீசியன் மொழி, 9. Kannada- கன்னடம், 10.Malayalam- மலையாளம், 11. Marathi- மராட்டி 12. Panjabi- பஞ்சாபி, 13. Polish- போலந்தின் பாலிஷ் மொழி, 14. Russian- ருஷ்யன் மொழி, 15.Sinhala- சிங்களம், 16.Swedish- சுவீடனில் பேசப்படும் சுவீடிஸ் மொழி, 17.Chinese- பழைமையான சீன மொழி Traditional, 18 தைவான்- ஹாங்கான் மற்றும் சீனா வின் பெருநகரங்களில் பேசப்படும் நவீன சீன மொழி (Simplified)
அதே போல் அவர் எழுதிய சில கட்டுரைகளை- அண்ணா பற்றிய கட்டு ரைகளையும் மொத்தம் 19 மொழிகளில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது
அண்ணாவின் புகழ் உலகளாவிய அளவில் பரவுக, ஓங்குக !
பொதுவாக தனி நபர் கள், தலைவர்களைப் பற்றி எழுதிப் பதிப் பதை வழக்கமாக ஏற்றுக் கொள்ளும் விக்கி பீடியா, தானாகவே முக்கிய தலை வர்கள் குறித்த தகவலை வெளியிடும், அப்படி வெளியிட்டதுதான் அறிஞர் அண்ணா குறித்த 18 மொழிகளில் வெளிவந்த விக்கிபீடியா பதிப்பு.
அண்ணா அவர்கள் அய்யாவின் பகுத்தறிவுச் சிந்தனைகளை, இனமானக் கொள்கைகளை, மூடநம் பிக்கை ஒழிப்புக் கருத்து களை, புராண இதிகாசப் புரட்டுகளை நாடெல்லம் நாவாலும், பேனா முனை யாலும் கொண்டு சென்றவர்.
இளைஞர்களை இயக் கத்தின்பக்கம் இணைத்தவர். எதிரிகளிடமிருந்து எந்தவிதத்திலும் பதிலளிக்க முடியாத 'ஏவுகணை'களை ஏவியவர்!
எளிமையானவர் - ஆட்சிப் பொறுப்பில் குறைந்த காலமே இருந் தாலும், காலத்தால் மறைக்க முடியாத சாதனை முத்திரைகளைப் பொறித்தவர்.
தாம் கண்ட கொண்ட ஒரே தலைவராக தந்தை பெரியாரை மட்டுமே ஏற்றுக்கொண்டவர்.
இருட்டடித்துப் பார்த்தார்கள்; இப்பொழுது விக்கிப் பீடியாவே தானாக முன்வந்து கட்டுரை மாலை சூட்டி மகிழ்கிறது, மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அண்ணா!!
- மயிலாடன்
No comments:
Post a Comment