பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்



திருச்சி, பிப். 22- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21-02-2023 (செவ்வாய்க்கிழமை)  காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர்  அரங்கில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தமிழ் மன்றம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைச்சொற்கள் கூறுதல், 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “காய்கறிகளில் கலை வண்ணம்” போட்டி,  6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு “செம்மொழித் தமிழ் மொழி” எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டி ஆகிய போட் டிகள் நடத்தப்பட்டன.

முத்தாய்ப்பாக, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள்; பங்கு பெற்ற “இன்றைய சூழலில் தமிழ்மொழி வளர்கிறதா?  வீழ்கிறதா? எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபெற்றுத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதா பாராட்டியதோடு, அனைவருக்கும் தாய்மொழி நாள் நல் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளி தமிழ் மன்றப் பொறுப்பாசிரியை திருமதி.கனிமொழி சிறப்பாகச் செய் திருந்தார். 

‘மாணவர் பல்திறன் நிகழ்ச்சி“

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 21-.2.2023 (செவ்வாய்கிழமை)  காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் அரங்கில், ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் திறமைகளை அரங்கேற்றும் வகையில்   ‘மாண வர் பல்திறன் நிகழ்ச்சி“ நடை பெற்றது.

மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்குப் பள்ளி முதல்வர் டாக்டர்.க.வனிதா தலைமை ஏற்றார். பள்ளியின்  ஒன்றாம் வகுப்பு மாணவர் செல்வன்.மிதுன் விநாயக் வர வேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோரை வரவேற் றார்.

நிகழ்வில் தமிழ், ஆங்கிலப் பாடல்கள், கதை சொல்லல், விடுகதை சொல்லல், கணிதப் புதிர்கள், எண் விளையாட்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள், தங்களின் பல் துறை சார்ந்த திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாள ராக வருகை புரிந்திருந்த பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

நிகழ்வின் இறுதியாகப் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி செல்வி வித்யாசிறீ நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment