ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி

 புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மற்றும் ஒன்றிய அரசு பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை பாஜக நா£ளுமன்ற உறுப் பினர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவையில் கோரியிருந்தார். இதற்கு ஒன்றிய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட, உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு களின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 2021 மார்ச் 3-ஆம் தேதி நிலவரப்படி ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.8 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இதன்படி அதிகபட்சமாக ரயில்வே துறையில் 2.93 லட்சம் கோடி காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு அடுத்து ஒன்றிய பாதுகாப்புத் துறை யில் 2.64 லட்சமும், உள் துறையில் 1.43 லட்சம் காலி பணியிடங்களும் உள்ளன. அஞ்சல் துறையில் 90,050, வருவாய் துறையில் 80,243, கணக்கு தணிக்கையில் துறை யில் 25,934, அணுசக்தி துறை யில் 9,460 உட்பட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்த மாக 9,79,327 காலியிடங்கள் உள்ளன. ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். இவ் வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.


No comments:

Post a Comment