சமூக ஊடகங்களிலிருந்து... 'பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச்சு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

சமூக ஊடகங்களிலிருந்து... 'பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச்சு?

ஒரு பேச்சுக்கு, கார்த்திகை செல்வனோ, அல்லது வேறு ஏதாவது ஒரு தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் ஜாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, ஜாதி வெறியைத் தூண்டும் படி, படு கொலைகளை, வன்முறையைத் தூண் டும்படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப் பொதுச் சமூகம் ஜாதி வெறியர்களாக ஒதுக்கித் தள்ளுமா தள்ளாதா? அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், பொது மேடைகள், நிகழ்ச்சிகள் குறையுமா குறையாதா? ஒரு வேளை  ஜாதி வெறியைத் தூண்டிய தற்காக வழக்குகள் கூட அவர்கள் மீது பாய வாய்பிருக்கிறதா இல்லையா?

ஆனால் ரங்கராஜ் பாண்டே, பார்ப்பன ஜாதி மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தன்னைப் போல் ஜாதிப் பெயரைத் ஜாதித் திமிருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அதே பழைய ஜாதிவெறி தீண்டாமை தீவிர மத சம்பிரதாய பழக்க வழக்கங் களுடன் வாழவேண்டும்; வாஞ்சி நாதனைப் போல் சனாதன ஜாதி வெறிக் காகக் கொலை செய்ய வேண்டும்" என்றெல்லாம் உச்சக்கட்ட ஜாதி வெறித் திமிருடன் கொக்கரித்த பின்னும் தமிழ்ப் பொதுச் சமூகம் அவரை எப்படி ஒரு ஊடகவியலாளராக, மனிதனாக இன்னும் பார்க்கிறது? அவருக்கு மேடை கொடுத்து அழகு பார்க்கிறது? வழக்கு களை விடுவோம்.. சிறு சலசலப்பு கூட ஏற்படுவதில்லையே!!

இது தான்  மற்ற எந்த ஜாதியினருக்கும் கிட்டாத பார்ப்பனர்களுக்கு மட்டுமே கி.ராவோ, பிரபஞ்சனோ, அல்லது வேறு ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரோ தீடீ ரென்று தங்கள் ஜாதிக்கு ஆதரவாகப், பொய்களை, மிகைப்படுத்தப்பட்ட கருத் துகளை,  அவ்வளவு கூட வேண்டாம்,

ஒருதலையான  நியாயங்களை எழுதினால் கூட அவர்களை எப்படி பார்த்திருப்போம்? ஜாதியவாதி, ஜாதி வெறியர் என என்னவெல்லாம் பட்டம் கொடுத்திருப்போம்.. குறைந்த பட்சம், அதற்குப் பிறகு அவர்களை எல்லோ ருக்கும் பொதுவான எழுத்தாளர்களாகக் கருதுவதில், நம் மனதில் ஒரு சிறிய அசூயைவாது வந்திருக்குமா.. இல் லையா..? ஆனால் அதையே அசோக மித்ரன் போன்றவர்கள் செய்தால் ஏன் அவர்களுக்கு எந்த சேதாரமும், அங்கீ கார இழப்பும் ஏற்படுவதில்லை?

ஆதித்தனாரோ, எஸ்.ஏ.பி அண்ணாமலையோ,  வேறு புகழ்பெற்ற பத்திரிக்கை அதிபரோ, 'எங்கே செட்டியார்', 'எங்கே நாடார்' போன்று தொடர்களை எழுதி, சதா சர்வ காலமும், வருடம் 365 நாளும், தங்கள் சாதிக்கு என்ன நலன் எனும் கோணத்திலேயே அரசியல், சமூகப் பிரச்சினைகளை அணுகி இருந்தால் அவரகளை ஒரு சாதிய வட்டத்திற்குள் சுருக்கி, ஒரு சாதி அபிமானியாக, வெறியராக பார்த்திருப் போமா இல்லையா? ஆனால் அதையே சோ ராமசாமி தொடர்ந்து செய்தாலும்,

அவரை அதிகபட்சம் வலதுசாரி பத் திரிகையாளர் என்றோமே தவிர என்றா வது பிராமண ஜாதி வெறியர் என்றிருக் கிறோமா?

அதே மாதிரி, ஜான் பாண்டியன், ஹரி நாடார், காமாட்சி நாயுடு, கருணாஸ் போன்றவர்களைச் சரியாகச் ஜாதி அரசியல் கட்சி அல்லது அமைப்புத் தலைவர்கள் என்னும் நாம்,

அவர்களைப் பொது அரசியல் வெளியில் இருந்து தவிர்க்கும் நாம், அதே போல் பேசும், இயங்கும் எச் ராஜா, அமெரிக்கை  நாராயணன் போன்றோரை அதே போல் பார்ப்பது, நடத்துவது இல்லையே.. ஏன்? 

கடைசியாகத், தொடர்ந்து தன் ஜாதி சார்ந்து எழுதிப், பேசி வரும் அண்ணா விவகாரம் மட்டும் இல்லை. சமீப காலமாகச் சுய ஜாதி சார்பாக, ஆதர வாகத், தொடர்ந்து அவர் எழுதிப் பேசி வருவது) பத்ரி ஷேஷாத்ரி, இன்னும் பொதுவெளியில் பதிப்பாளர் என்று மட்டும் அறியப்படுவது, அழைக்கப் படுவது ஏன்?

பார்ப்பன ஜாதி ஆதரவாளர், ஜாதி ஆர்வலர், அல்லது உண்மையை உடைத்துச் சொல்வதானால்,

ஜாதி வெறியர் பத்ரி என்று தானே அவர் அழைக்கப்பட வேண்டும்?

சமயம், சமூகம் எல்லாவற்றிலும் கொடுக்கப்படும் முன்னுரிமைகள் போதா தென்று,  ஜாதியவாத ஒழிப்பில் கூடவா வேதவிற்பனர்களுக்குத் தனி நடை முறைபும், சிறப்புச் சலுகைகளும்?

- Arun Bala

No comments:

Post a Comment