இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமியப் பெண்.. சானியா மிர்சா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமியப் பெண்.. சானியா மிர்சா

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல் லைக்குட்பட்ட அய்சோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு தொலைக்காட்சி பழுது நீக்குபவர் ஆவார்.சிறுவயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த சானியா, வளர வளர போர் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக முழு ஈடுபாட்டுடன் பள்ளி, கல்லூரி முடித்த இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தீவிரமாக படித்தார்.

தாய் மொழிக் கல்வி வழியில் மட்டுமே பயின்ற இவர், தனது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆரம்பக் கல்வி முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதன் பிறகு, அவர் நகரில் உள்ள குருநானக் பெண்கள் கல்லூரிக்கு சென்றார்.தனது ரோல் மாடலாக இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர் வேதியை கருதுகிறார். தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தயாராகி வந்த இவர், அண்மையில் நடைபெற்ற தேர்வில் 149ஆவது ரேங்க் எடுத்து சாதனை படைத் துள்ளார்.தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில், ஆண் மற்றும் பெண் உட்பட மொத்தம் 400 இடங்கள் இருந்தன. பெண்களுக்கு மொத்தமாக 19 இடங்களும், அதில் போர் விமானி பிரவில் இரண்டு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு இடங்களில், சானியா தனது திறமையின் மூலம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து சானியா கூறுகையில், "புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைய வுள்ளேன். எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும் தான் எனது வெற்றிக்கு முழு காரணம். 

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண் களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல் முயற்சியில் என்னால் இடத்தை பெற முடியவில்லை. ஆனால் எனது இரண்டா வது முயற்சியில் எனக்கு இடம் கிடைத் துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment