புதுடில்லி, ஜன 23- டில்லியில் உள்ள காவல்துறை பள்ளியில் ஆங்கில ஆசிரிய ராக இருக்கும் நாவல் கிஷோர் பண்டே சைக்கி ளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ் வழியாக இரண்டு பெண் காவலர்கள் சென்றுள்ள னர்.
இதைக்கண்ட அவர் அவர்களின் உடல் மொழி, நடை மற்றும் அவர்கள் அணிந்திருந்த சீருடைகுறித்து ஆபாச மான வகையில் அவர்க ளைக் கிண்டல் அடித்து உள்ளார். முதலில் இத னைக் கண்டுகொள்ளா மல் சென்ற பெண்காவலர் கள் ஒரு கட்டத்தில் அவர் தொடர்ந்து கேலி செய்துவந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் நான் மிகவும் வயதானவன் எனது பேச்சை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி மேலும் தொடர்ந்து பேசியதில் லாமல் காவலர்களின் ஆடைமேல் கைவைத்து உள்ளார்.
இதனை அடுத்து இரண்டு பெண் காவலர் களும் அவரை நையப் புடைத்து விட்டனர். இதனை அடுத்து ஆபாச மாக பேசிய நபர் காவல் நிலையம் சென்று பெண் காவலர்கள் மீது புகார் அளித்தார்.
இந்த நிலையில், நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டுமென காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.
அங்குள்ள சிசிடிவி காமிராவில் ஆசிரியர் பெண்காவலர்கள் பின் னால் சைக்கிளில் செல் வது அவர்களோடு வாக் குவாதம் செய்வதும் தெளிவாக தெரிந்தநிலை யில் அங்குள்ள நபர்களி டம் விசாரணை செய்து வருகின்றனர். டில்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ள நிலை யில் பெண் காவலர்க ளையே பகலில் சீண்டிப் பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment