சோமரசன்பேட்டை, ஜன. 7-- கடந்த 1.1.2023 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மணிகண் டம் ஒன்றியம் சோமரசன் பேட்டை பகுதி கழகக் கலந்துரையாடல் கூட்டம் வசந்தநகரில் ஆசிரியர் மு. நற்குணம் இல்லத்தில் ஒன்றியத் தலைவர் சா. செபஸ்தியான் தலைமை யிலும், மு.நற்குணம் முன் னிலையிலும் நடைபெற்றது.
தோழர்கள் மகாமணி, அறிவழகன், ராஜசேகர், சங்கிலி, திருஞானசம்பந் தம், தியாகராசன், கோகுல் ஆகியோர் உரைக்கு பிறகு மு.நற்குணம் கூட்டத்தின் நோக்கம் இயக்க செயல் பாடுகுறித்தும் விளக்க உரையாற்றினார். இறு தியாக தோழர் சு.ராஜ சேகர் நன்றி கூறினார்.
மு.நற்குணம், சா. செபஸ்தியான், ஒன்றிய தலைவர், சி.திருஞாண சம்பந்தம், ஒன்றிய செய லாளர், பி.தியாகராசன், சங்கிலி, சு.மகாமணி, சு.ராஜசேகர், க.கோகுல் ராஜ், வீ.அறிவழகன், சி.நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்.
தீர்மானம் 1: தை முதல் நாள் சோமரசன் பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்வது என்றும்
தீர்மானம் 2: தமிழ் புத்தாண்டு (தை முதல் நாள்) விளக்க துண்டறி க்கை விநியோகம் செய் வது என்றும்
தீர்மானம் 3: தெரு முனை பிரச்சார கூட்டம் நடத்துவது என்றும்
தீர்மானம் 4: சமத்துவ பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடு வது என்றும் தீர்மானிக் கப்பட்டது.
No comments:
Post a Comment