மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களுக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களுக்கு...

நம் மரியாதைக்கும், போற்றுதலுக்குமுரிய, தமிழர் தலைவர் அவர்கள், 90 வயது கடந்துவிட்ட சூழ்நிலையிலும், ஓய்வின்றி , உறக்கமின்றி தந்தை பெரியார் ஒப்படைத்த, திராவிடர் கழகம் என்னும் மாபெரும் சமூக நீதி இயக்கத்தை, அதன் கொள்கைப் பாதையில், சற்றும் வழுவாமல் நடை பயின்று, இயக்கத்தைக் காத்து நிற்கும், பெரும் பொறுப்பில் தன்னையே விலையாக ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். திராவிடர் கழகத்தின் அத்துணை அணிகளையும்,  அந்த அணிகளின் செயல்பாடுகளையும், மென்மேலும் வலிமைப்படுத்திடவும், கூர்மைப்படுத்திடவும், கொள்கைப் பாதையில் ஒருமுகப்படுத்திடவும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

அந்த அடிப்படையில் வருகின்ற 30-01-2023 அன்று, திராவிடர் கழக மகளிர் அணி - திராவிட மகளிர் பாசறை ஆகிய அணிகளின், மாநில கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைகள், ‘நீட்' நுழைவுத் தேர்வுகள் வடிவத்திலும், புதிய தேசியக் கல்விக் கொள்கை  வடிவத்திலும், உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக அநீதி வடிவத்திலும், ஆளுநரை விட்டு ஆழம் பார்ப்பதும், மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூக நீதியின் சரித்திர நாயகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை சிறுமைப்படுத்தும் வடிவத்திலும், தங்களுக்கான ஆட்சி, ஒன்றியத்தில், பார்ப்பன ஜனதா ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்ற மிதப்பிலும், மிகுந்த வீரியம் மிக்க நச்சுப் பாம்புகளாய், நாகப் பாம்புகளாய், படம் எடுத் தாடும் இந்த வேளையில், அந்தக் கொடுங்கோன்மைகளை எதிர்த்துப் போராடும் களப்பணியில், தங்களை ஒப்படைத் துக் கொண்டுள்ள, திராவிடர் கழக அணிகளில்  ஒன்றான திராவிடர் கழக மகளிர் அணியும், திராவிட மகளிர் பாசறை யும் மிகுந்த வீரத்தோடும், வீரியத்தோடும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில், நமக்கான இயக்க செயல் பாடுகள், செயல்பாட்டு திட்டங்கள், மாநாடுகள் குறித்து உரையாட, மாநில மகளிர் அணி-மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டத்தை சென்னை பெரியார் திடலில் 30-1-2023 அன்று நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் அனைத்து கழக மாவட்டங்களிலும் இருக்கின்ற மகளிர் தோழர்கள், மேலும் சமூக நீதி உணர்வோடு, அறிவாசான் தந்தை பெரியாரின் தத்துவத் துக்கு  துணை நிற்கும், எந்த அமைப்பிலும், கட்சியிலும் இருந்தாலும், திராவிட மகளிர் பாசறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம், என்ற அடிப்படையில் இருக் கின்ற இளைய மகளிரும், பெருமளவில் இந்த கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்பு டன்  கேட்டுக்கொள்கிறோம்.

கழக மாவட்டங்களைச் சார்ந்த, பெருமைமிகு  மாவட்ட,  மண்டல, மாநில  பொறுப்பாளர்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து, தங்கள் தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் இருந்து, அதிக அளவில் மகளிர் தோழர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- தகடூர் தமிழ்செல்வி, 

மகளிரணி மாநிலச் செயலாளர் 


No comments:

Post a Comment