2014 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது நான் ஆட்சிக்கு வந்தால் டாலர் மதிப்பை 40 ரூபாய்க்கு கொண்டுவருவேன் என்று மோடி கூறினார். ஆனால் இன்று டாலர் மதிப்பிற்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு அபாயகரக் குறியீட்டையும் தாண்டி சரிந்துவருகிறது. இதனை சரி செய்ய மோடி நிர்மலா சீத்தாராமன் போன்றோர் எந்த முயற்சியும் செய்யாமல் இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை. டாலர் மதிப்பு தான் அதிகரித்து உள்ளது, என்று நகைச்சுவையாக நாடாளுமன்றத்திலே பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ரூபாய் மதிப்பை உயர்த்துவேன் என்று கூறிய நபரைத் தேடுகிறோம் என்ற பெயரில் . மோடி 2019 ஆம் ஆண்டு வாக்குப்பதிவு இறுதி நாள் அன்று கேதர்நாத் குகையின் சாமியாராக உட்கார்ந்திருக்கும் நிழற் படத்தை காவி நிறத்தில் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment